என் நான்…


இன்னும்
கடினமான மனதுடன்
கண்ணீருடன்….!
தனித்து
விடப்பட்டது போல்
நீ உன்னுள் வரண்ட
நம்பிக்கையுடன்
அன்பற்ற தேசத்தில்
நேசிக்க மனமற்று
போனதாய்
நினைக்கிறாய்
என்று எனக்குத்தெரியும்
பாடபுத்தகங்களும்
விரிவுரைகளுக்கும் இன்றும்
பல்கலைக்கழம் தருகின்ற
நினைவுகளும்
மூழ்க முடியாதவளாக
கண்ணீருடன் அழவா
செய்கிறாய்….?
 
என்ன செய்வது
கண்ணீரை துடைக்க
முடியாதபடிக்கு
என் கைகள்
கட்டப்பட்டிருக்கின்றன!
வீட்டின்
தனிமைச் சிறையில்
என் ஆயுள் கழிகின்றது
அதன் வன்முறைகளுடன்
உனக்காவது ஒரு
விடுதலைக்கான
வெளி
இருக்கின்றது…….
நானோ அறைகளின்
வெப்ப தகிப்பில்
ஒற்றை கனவுகளுடன்
சாகின்றேன்
Advertisements

Comments are closed.

%d bloggers like this: