பிரிவின் பாடல்


மெல்லிய ஈர காற்றில்
ஜன்னல்களும் கதவுகளும்
சப்தம் வரு திசைக்கு
அழைக்கின்றது…

வெறுமை சூழும்
என் அறைகளில் மங்கலான
நாளில் உனது ஞாபகங்கள்….
விவாகரத்து நோக்கி
செல்லும் மண வாழ்வின்
முடிவுகள்…..
உணர்வுகளின் தீராத
நினைவுகள் மட்டும்
மனசாட்சிகளை போட்டு
உழுக்கின்றது….

காற்று வீசிய
பூமரத்தின் உதிர்ந்த
செம்மலர்கள் போல
தரையில் கிடக்கும் உயிராக
உன்னை குறித்து எழில்
எனது பாலைவன நினைவில்
தீராத காயங்கள்
மிஞ்சுகின்றது……

ஒலி அறுந்த நாடாவை
போல
நம் பாடல்கள்
தடைப்பட்டு
சூனியமாகின்றது
ராணுவம் சுற்றித்திரியும்
எனது தெரு முனை போல….

Advertisements

Comments are closed.

%d bloggers like this: