தமிழ் சினிமா நடைமுறையும் சில விமர்சன குறிப்புகளும்


“ஒரு மோசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு எந்தவொரு நல்ல இயக்குனராலும் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியாது, ஒரு நல்ல திரைக்கதை எழுத, நீங்கள் உலகின் சிறந்த நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகளைப் படிக்க வேண்டும்.”

 
     -அகிராகுரோசோவா-

 வெகுஜன வியாபார சினிமாவின் கதை சமரசங்களும், கதையாடல்களும் ஒரு தனி நபரையும், பணத்தின் அடிப்படையிலும் கதை என்கிற தளம் தீர்மானிக்கப்படுகின்றது.

கதைக்காக நிகழ்த்தப்படும் சமரசங்கள் எல்லாமே பணமே பிரதானமாக இருப்பது போல் தோற்றமளித்தாலும், பார்வையாளர்களின், பெரும் திரள் ரசிகர்களின் பிரதிநிதியாக வெகுஜன தளத்தில் இயங்கும் பட முதலாளியும் -இயக்குனரும் பார்வையாளனின் விருப்பத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை அனுமானங்களின் அடிப்படையிலும், சுய விருப்பு வெறுப்பின் நிலையிலும், நிலவும் பொதுபுத்தியின் மேம்போக்கான நிலையிலுமே தீர்மானித்து விடுகிறார்கள்.

 
நடைமுறையும் – சம்பிரதாயங்களும் நிலவும் வியாபார சினிமா நிறுவனத்தின் புதிய மாற்று சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போவதன் அடிப்படை, “படம் தோல்வி ஏற்பட்டு விடுமோ: படம் ஓடாதோ” என்கிற பொருளாசை பாதுகாப்பு பயமே காரணங்களான சொல்லப்பட்டாலும், மாற்று சிந்தனை போக்குக்கு தமிழ் வெகுஜன வியாபார சினிமாவில் மறுப்புக்கு பிரதான காரணங்கள் பொருளாதார வியாபார காரணங்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அடிப்படையில் கலந்திருக்கும் ஆதிக்க கருத்தியல் வன்முறையும் பிரதான காரணமாகும்.

இவ்வாதிக்க கருத்தியல் வன்முறைக்கு கீழான தமிழ் வெகுஜன வியாபார, கலை சினிமா வியாபாரிகளினது அரசியல் இயங்குகின்றது. புதிதாய் திரைப்படம் எடுக்க வரும் இளம் இயக்குனரின் பின்புலமும், வாழ்க்கை சூழலுமே தனக்கான கதையை தேர்ந்தெடுக்க து}ண்டுகழறது. 100 நாட்கள் ஓடும் கதையையே ஒவ்வொரு இளம் இயக்கு னர்களின் கனவாக இருக்கின்றது. ஒவ்வொரு இளம் இயக்குனர்களினதும் “சினிமா” அவனுடைய ஒற்றை அறையின் சோற்று பானையின் சோற்றுப் பருக்கைகளே தீர்மானிக்கின்றது.

தீவிரமான மாற்று சினிமாவை பற்றிய ஞாபகங்களுடன் வாழும் இளம் இயக்குனரின்  நிலையோ அங்கு நிலவும் நடைமுறைக்கு மத்தியில் தன் படைப்பை படைப்பாளுமை யை தொலைத்து விடுகின்ற பரிதாபமும் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு வன்முறை நடைமுறைக்கு தன் சினிமாவை தொலைத்துவிடும் அபாயமும், அதனுடைய ஆதிக்கைகளின் பிடியில் சிக்கி சிதைந்து போகும் சூழல் இருப்பதை 
 
உணராது, அதனுடைய நடைமுறையின் ஒரு அங்கமாகி, சுரண்டும் வன்முறை கலாச்சாரத்தின் பிரதநிதியாக ஒரு நல்ல சினிமா இயக்குனன் அழிந்து ஒழிந்து போவதும், தான் சொல்ல நினைத்ததை தான் எடுக்க விரும்பிய காட்சிகளை தன் கனவாகவே மன சிறைகளில் சிதைவுகளுடன் போட்டு பாதுகாத்துக் கொண்டு, புழுக்கம் தாங்காமல் எப்போதாவது மணிரத்னம், கமலஹசன், பாலுமகேந்திரா போல தீர்க்கமாக நீன்ட போட்டி என்கிற பெயரில் ஒவ்வாத உணர்வுகளை வெளிப்படுத்தியபடி இருப்பதாகி விடுவது கவனிக்கத்தக்கது.

ஒரு அங்கமாக கொண்டிருக்கும் இந்த சினிமா வியாபாரிகளின் அதிகார மையங்களை இன்று நாம் கேள்விக்குட்படுத்துகின்றோமோ அன்றுதான் வெகுஜன சினிமாவிற்குள் மாற்று சினிமா பற்றி பேச முடியும். அதுவரை நாம் விமர்சனங்கள், கருத்துபகிர்வு என்ற பெயரில் அந்த அதிகார மையங்களில் அடிவருடிகளாக, அடிப்படைகளை கூட கேள்வி எழுப்ப தெரியாத சூழலிலேதான் வாழ வேண்டியிருக்கும்.

இக்கட்டுரை தமிழ் சினிமாவின் கதையாடல்களை பற்றி அல்ல, தமிழ் சினிமாவில் நிழவும் கதைபிரதி, திரைக்கதை பிரதி தயாராகும் சூழலில் நிகழும் சம்பிரதாயங்களையும். சமரசங்களையும் நடைமுறைகளில் விளங்கிகொள்ளவும் கதை, திரைக்கதை பிரதி தேர்வு செய்யும் வழியாகவே தமிழ் சமூகமான கட்டமைப்பையும் கருத்தியல் பரப்பில் கதைதேர்வின் அபத்தை நிகழ்வும் எப்படி வெகுஜன கருத்து க்களாக தினிக்கப்படுகின்றது. என்பதையே இக்கட்டுரை விபரிக் கும் தளம்.
“திரைப்படம் சமூகத்தை மாற்றாது மாற்றியதுமில்லை நிறுவனமயமான சில இலக்குகளை தாக்குவது மிக சுலபம். தாக்குதல் பற்றி பொருட்படுத்தாத ஆட்களை தாக்கி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியவற்றினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நிறுவனங்கள் இருக்கின்றன. அப்புறம் அந்த தாக்குதலால் என்ன பயன்?” என்கிற சத்தியஜித்ரயின் கருத்தின் அடிப்படையில் நாம் எவ்வளவுதான் தமிழ் சினிமாவைப் பற்றியும், அதனை இயக்கும் இயக்குனர், கருத்துதலத்தை விமர்சித்தாலும் எவ்விதமான மாற்று சிந்தனையும் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. அடிப்படைகளை, கருத்தியல் அதிகாரங்களை கதைகள் என்கிற பெயரில் ஆதிக்க வர்க்கத்தினரின் அறம் ஒழுக்க மரபுகளை திரைக்கதை பிரதிகளாகத் தேர்வு செய்யும் வியாபார வர்க்கத்தினரை நாம் கேள்விக்குட்படுத்தாதவரை நம்முடைய விமர்சன குரல்கள் எம்முறையில் இருந்து ஒலித்தாலும் அது வியாபார வெற்றிக்கான உத்திகளாகவே முடியும்.

விமர்சன ரீதியாக நாம் வெகுஜன சினிமாவை கேள்வி எழுப்பும் இலக்குகளின் கவனமும், புது மையத்து}ரமும் எவ்வளவு து}ரம் கலககூறு நிரம்பியது. எதிரியின் இலக்குகளை எத்தனை ஆழமாக நம்முடைய விமர்சன கணைகள் தாக்குகின்றன என்பதனையும் கவனித்து நம் விமர்சன பார்வையின் கூர்மையை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டி இருக்கின்றது.

 
நாம் சரியான இலக்குகளை விட்டு விட்டு மேலோட்டமான நுணிக்குள் தன்மையோடு விமர்சனத்தை தொடர்வோமானால் விமர்சக என்ற ரீதியில் நாமும் அதிகாரம் இயந்திரங்களை அங்கங்களாகவே இருப்போம் நம்முடைய போர் குணம் அற்ற விமர்சனங்கள் கூட மாற்றுக்கான தேவையை வழியுறுத்தாமல், நிழவும் பாசிச அமைப்புக்கு எதிர் நிலையிலிருந்து குரல் கொடுக்கும் துரோக செலாகவே இருக்கும்.

நம்முடைய நோக்கம் இந்த அபத்த “சினிமாவை விமர்சிப்பது” அல்ல, அச்சினிமா கருக்கொள்ளும் சூழலையும், அது உருவெடுக்கும் அடிதளத்தையும் நாம் கேள்வி எடுக்க வேண்டும். சினிமாவை கருக்கொள்ளும் சூழலையும் அது உருவெடுக்கும் அடிதளத்தையும் நாம் கேள்வி எடுக்க வேண்டும். சினிமாவை விமர்சிப்பது என்பது வேறொரு தளம் தான்…. அது பின் நவீனத்துவ- கட்டுடைப்பு தளம்தான். ஆனால் வெகுஜன வியாபார சினிமா பற்றி அரசியல் தளத்தில் இருந்து பேசும் தோழர்கள் அடிப்படைகளை நடைமுறைகளை தொடர்ந்து தாக்காதவரை எவ்விதமான மாற்று குரலையும் அவ்வமைப்பு தன்னுள் அனுகல வேணும். அனுமதிக்காது – தொடர்தாக்குதல் மூலமாகவும் – ஒளிவட்ட புணிதங்களை கட்டுடைப்பதன் வாயிலாகவும் பொய் அபத்த நிகழ்வுகளை தீர்ப்பதன் மூலமாகவும் வெகுஜன திரள் மக்களிடம் நிலவும்பொது புத்தியை – கட்டமைப்புகளை – அதிகார வர்க்கங்களின் புணைவுகளை – பெரும் கதையாடல்களை – கட்டமைப்புகளை – கற்பிதங்களை – பொய்களை – போட்டுடைப்பதன் மூலமாகவே, மாற்று சினிமாவை
மாற்றுபடைப்பை, எதிர்வூடகங்களை, உருவாக்குவதன் மூலமாகவே நிலவும் அதிகார அமைப்புகளின் மேல் வெடிப்பை ஏற்படுத்த முடியும். இவைகளை எல்லாம் மறந்து விட்டு படைபாளியினதும், விமர்சகனினதும் நிலைப்பாடு வேறொன்றாய் அமையும் பட்சத்தில் அதி அதிகார கருத்தியல் களுக்கு எதிர் நிலையிலிருந்து துதிபாடும் போலியான நடுநிலைப்பாடகவே அமையும்.

உலகில் இரண்டே இரண்டு நிலைபாடுதான் இருக்கமுடியும் -ஒன்று ஒடுக்குபவனின் நிலைபாடு இரண்டு ஒடுக்கப்பட்டவனின் நிலைப்பாடு – நடுநிலைவாதி என்பவன் போலியானவன் அவனுடைய நிலைபாடும் ஒடுக்குபவனின் நிலைபாடாகவே இருக்கும் – இதிலே வரலாறுகள் சொல்லும் சாட்சி.

சம காலத்தில் தமிழ் வெகுஜன வியாபார சினிமாவில் நிலவும் அபத்தமான சூழலைப் பேலதான் பிரெஞ்சு சினிமாவிலும் நிலமை நீடித்தது. ஆனால் “புதிய அலை” சினிமா இயக்கம் உருவெடுத்த போது இன்நிலைமைகள் தகர்ந்து மாறியது. புதிய அலையின் சினிமா விமர்சகர்கள் அடிப்படைகளின் மேல் தொடர்ந்து கவனத்தை குவிப்பதனால் அங்கிருந்த வியாபார வர்க்கம் யோசித்தது. புரட்சிகரமான விமர்சன அணுகுமுறையும் – மாற்று படைப்பும் புதிய அலைக்கான தோற்றம் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இதுவரை சினிமா வரலாற்றில் தலித்தியம், பெண்ணியம், பற்றிய நேர்மையான பார்வைகளை இச்சினிமா ஏன் தன் கதை தளத்தில், காட்சி நிகழ்வில் ஏன் நிகழ்த்தவில்லை என்கிற கேள்விகள் மட்டுமே நம்முன் எழுகின்றது. ஆனால் மாற்று சிந்தனைகi வெகுஜன தளம் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. ஏற்றுக்கொள்ள மறுக்கும் காரணிகள் என்ன?
அக்காரணிகளின் குணநலன் என்ன….? என்கிற தளங்களிலும் விவாதங்கள் எழ வேண்டும்

ஆகவே அடிப்படை காரணிகளை தவறவிட்டு விட்டு வேர்களை விசாரிப்பதை மறந்து விட்டு, கிளைகளை விசாரிப்பதென்பது நடுநிலைவாதியின் நிலைப்பாடாகவே அமையும். ஆகவே நாம் நேரடியாக கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது.

முதலில் மிழ் சினிமாவின் ஐதர் அலி காலநடைமுறைகளை கேள்விக்குட்படுத்தாத வரையில் ஜான் ஆபிரகாம் பேசும் சிமாவோ, ருத்ராய்யா, அருண்மொழி, ஹரிஹரன் பேசும் சினிமாவோ தமிழ் வெகுஜன வியாபார சினிமாவில் உருவெடுப்பதற்கு வாய்ப்பு சற்றேனும் இல்லை.

நடைமுறைகளை, அது கொண்டிருக்கும் கதை பிரதி தேர்வு ஒழுக்க வழிமுறைகளை தயாரிப்பு என்கிறகலை மோசடிகாரனின் மனசிதைவை அது விமர்சனத்துக்கு உற்படுத்த வேண்டும் படைப்பு என்கிற பெயரில் நிலவும் அதிகார மையங்களின் போலி ஒழுங்கை கட்டுடைக்க வேண்டும்.
 
மேலும் தமிழ் வியாபார சினிமாவில் அலுவலக நிகழ்வுகளும், படப்பிடிப்பு தள அடக்குமுறைகளும், பெண் வெறும் போத பொருளாகவும் உதிரிகளாகவும் கச்சாப் பொருட்களின் மனோபாவத்துடன் அணுகும் நடைமுறைகளையும் சக தொழில் நுட்ப கலைஞர்கள் நடத்தப்படும் விதமும் துணை நடவடிக்கைகளை அடிமைகளா, பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்தப் படுபவர்களாக  
ஆணாதிக்க நடைமுறைகளை நாம் கேள்வி எழுப்ப வேண்டியவர்களாகவும்… இயக்குனர் – உதவியாளர்கள் – அவர்களின் கீழ் தொழில் பயில்முறை இயக்குனர்கள் மேல் செலுத்தும் அதிகார காழ்ப்புணர்வு மனப்பாங்கையும், வாழிபாட்டு மனப்பாங்கையும், கதை விவாதத்தின் போது நியாயமான விமர்சனங்களை கூட சொல்ல விடாமல் தடுக்கும் அதனுடைய சம்பிரதாயங்கள், வழிபாட்டு மன அமைப்பை: கட்டமைக்கப்பட்ட இயக்குனர் – குரு ஸ்தானத் திலும், உதவியாளர்கள் சிஷ்யர்களாக கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்களை, நவீன அடிமைத்தனங்களை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும் “மனிதன்” என்கிற அடிப்ப டையில் அவனுடைய உணர்வுகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட வேண்டும். ஆண்டான் அடிமை என்கிற நிலவும் இந்த பாசிச நடைமுறைக்கு எதிரான மாற்று சிந்தனைகளை எங்கு இருந்து ஆரம்பிப்பது. நிறுவன மயமாக்கப்பட்ட தமிழ் வெகுஜன வியாபார சினிமாவின் (“சினிமா” என்று குறிப்பிடும் போது தமிழில் எதை சினிமா என்பது என்கிற தயக்கம் ஏற்படுகின்றது. எல்லாமே அபத்த நாடக பிரதியின் திரை வடிவங்கள் தான்) நடைமுறைகளை, அதன் உள்ளிருக்கும் அதிகார துவங்களை, வழிபாட்டு மனப்பான்மையை, அடக்கு முறைகளை, தாழ்வு மனப்பாங்கை அதன் அடிப்படையாக விதைக்கும் மனப்போக்கை: கொத்தடிமை தனத்தை ஒரு அங்கமாக கொண்டிருக்கும் இந்த சினிமா வியாபாரிகளின் அதிகார மையங்களை இன்று நாம் கேள்விக்குட் படுத்துகின்றோமோ அன்றுதான் வெகுஜன சினிமாவிற்குள் மாற்று சினிமா பற்றி பேச முடியும். அதுவரை நாம் விமர்சன ங்கள், கருத்துபகிர்வு என்ற பெயரில் அந்த அதிகார மையங் களில் அடிவருடிகளாக, அடிப்படைகளை கூட கேள்வி எழுப்ப தெரியாத சூழலிலேதான் வாழ வேண்டியிருக்கும். 

Advertisements

9 Comments (+add yours?)

 1. Single Serve Coffee
  Jan 29, 2011 @ 07:44:21

  Thank you for a fantastic and teaching posting.I hope you do not mind a link back from my blog.

 2. cancer survival rate
  Feb 12, 2011 @ 18:11:00

  I would recomended to friends! I have highlighted this page and tell this is a interesting and helpfull article – Thank you very much, We wish you dont mind me blogging about this article on my website I will also link back this page. Thank you so much

 3. fire pit covers
  Feb 18, 2011 @ 23:51:50

  My friend recomended this page! I have highlighted this page and say this is a superb and recomended article – Special thanks, We wish you dont mind me writting about this post on my blog I will also bookmark to this post. Thank you so much

 4. London payday loans
  Apr 15, 2011 @ 17:06:26

  my God, i thought you were going to chip in with some decisive insght at the end there, not leave it with ‘we leave it to you to decide’.

 5. bad credit car loan
  Apr 21, 2011 @ 06:42:06

  I harmonise with your conclusions and will thirstily look forward to your next updates. Just saying thanks will not just be enough, for the exceptional clarity in your writing. I will directly grab your rss feed to stay privy of any updates. Solid work and much success in your business endeavors!

 6. maxus czarter
  Apr 21, 2011 @ 15:40:40

  I’m impressed, I have to say. Actually not often do I encounter a weblog that’s each educative and entertaining, and let me tell you, you’ve hit the nail on the head. Your idea is excellent; the difficulty is something that not enough people are talking intelligently about. I am very blissful that I stumbled across this in my seek for one thing regarding this.

 7. Internet Casino
  Apr 25, 2011 @ 13:41:17

  Terrific article once again.I am a frequent visitor to your blog.Happy Easter Time!

 8. Training Online
  Jul 26, 2011 @ 21:11:35

  We’ll speak a little about what you should speak about when is shows correspondence to simply because Maybe this has more than one meaning.

 9. digital art
  Sep 29, 2011 @ 13:44:24

  This is getting a bit more subjective, but I much prefer the Zune Marketplace. The interface is colorful, has more flair, and some cool features like ‘Mixview’ that let you quickly see related albums, songs, or other users related to what you’re listening to. Clicking on one of those will center on that item, and another set of “neighbors” will come into view, allowing you to navigate around exploring by similar artists, songs, or users. Speaking of users, the Zune “Social” is also great fun, letting you find others with shared tastes and becoming friends with them. You then can listen to a playlist created based on an amalgamation of what all your friends are listening to, which is also enjoyable. Those concerned with privacy will be relieved to know you can prevent the public from seeing your personal listening habits if you so choose.

%d bloggers like this: