தமிழ் சினிமா நடைமுறையும் சில விமர்சன குறிப்புகளும்


“ஒரு மோசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு எந்தவொரு நல்ல இயக்குனராலும் ஒரு நல்ல படத்தை எடுக்க முடியாது, ஒரு நல்ல திரைக்கதை எழுத, நீங்கள் உலகின் சிறந்த நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகளைப் படிக்க வேண்டும்.”

 
     -அகிராகுரோசோவா-

 வெகுஜன வியாபார சினிமாவின் கதை சமரசங்களும், கதையாடல்களும் ஒரு தனி நபரையும், பணத்தின் அடிப்படையிலும் கதை என்கிற தளம் தீர்மானிக்கப்படுகின்றது.

கதைக்காக நிகழ்த்தப்படும் சமரசங்கள் எல்லாமே பணமே பிரதானமாக இருப்பது போல் தோற்றமளித்தாலும், பார்வையாளர்களின், பெரும் திரள் ரசிகர்களின் பிரதிநிதியாக வெகுஜன தளத்தில் இயங்கும் பட முதலாளியும் -இயக்குனரும் பார்வையாளனின் விருப்பத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை அனுமானங்களின் அடிப்படையிலும், சுய விருப்பு வெறுப்பின் நிலையிலும், நிலவும் பொதுபுத்தியின் மேம்போக்கான நிலையிலுமே தீர்மானித்து விடுகிறார்கள்.

 
நடைமுறையும் – சம்பிரதாயங்களும் நிலவும் வியாபார சினிமா நிறுவனத்தின் புதிய மாற்று சிந்தனைகளுக்கு இடமில்லாமல் போவதன் அடிப்படை, “படம் தோல்வி ஏற்பட்டு விடுமோ: படம் ஓடாதோ” என்கிற பொருளாசை பாதுகாப்பு பயமே காரணங்களான சொல்லப்பட்டாலும், மாற்று சிந்தனை போக்குக்கு தமிழ் வெகுஜன வியாபார சினிமாவில் மறுப்புக்கு பிரதான காரணங்கள் பொருளாதார வியாபார காரணங்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் அடிப்படையில் கலந்திருக்கும் ஆதிக்க கருத்தியல் வன்முறையும் பிரதான காரணமாகும்.

இவ்வாதிக்க கருத்தியல் வன்முறைக்கு கீழான தமிழ் வெகுஜன வியாபார, கலை சினிமா வியாபாரிகளினது அரசியல் இயங்குகின்றது. புதிதாய் திரைப்படம் எடுக்க வரும் இளம் இயக்குனரின் பின்புலமும், வாழ்க்கை சூழலுமே தனக்கான கதையை தேர்ந்தெடுக்க து}ண்டுகழறது. 100 நாட்கள் ஓடும் கதையையே ஒவ்வொரு இளம் இயக்கு னர்களின் கனவாக இருக்கின்றது. ஒவ்வொரு இளம் இயக்குனர்களினதும் “சினிமா” அவனுடைய ஒற்றை அறையின் சோற்று பானையின் சோற்றுப் பருக்கைகளே தீர்மானிக்கின்றது.

தீவிரமான மாற்று சினிமாவை பற்றிய ஞாபகங்களுடன் வாழும் இளம் இயக்குனரின்  நிலையோ அங்கு நிலவும் நடைமுறைக்கு மத்தியில் தன் படைப்பை படைப்பாளுமை யை தொலைத்து விடுகின்ற பரிதாபமும் ஏற்கனவே நிறுவப்பட்ட ஒரு வன்முறை நடைமுறைக்கு தன் சினிமாவை தொலைத்துவிடும் அபாயமும், அதனுடைய ஆதிக்கைகளின் பிடியில் சிக்கி சிதைந்து போகும் சூழல் இருப்பதை 
 
உணராது, அதனுடைய நடைமுறையின் ஒரு அங்கமாகி, சுரண்டும் வன்முறை கலாச்சாரத்தின் பிரதநிதியாக ஒரு நல்ல சினிமா இயக்குனன் அழிந்து ஒழிந்து போவதும், தான் சொல்ல நினைத்ததை தான் எடுக்க விரும்பிய காட்சிகளை தன் கனவாகவே மன சிறைகளில் சிதைவுகளுடன் போட்டு பாதுகாத்துக் கொண்டு, புழுக்கம் தாங்காமல் எப்போதாவது மணிரத்னம், கமலஹசன், பாலுமகேந்திரா போல தீர்க்கமாக நீன்ட போட்டி என்கிற பெயரில் ஒவ்வாத உணர்வுகளை வெளிப்படுத்தியபடி இருப்பதாகி விடுவது கவனிக்கத்தக்கது.

ஒரு அங்கமாக கொண்டிருக்கும் இந்த சினிமா வியாபாரிகளின் அதிகார மையங்களை இன்று நாம் கேள்விக்குட்படுத்துகின்றோமோ அன்றுதான் வெகுஜன சினிமாவிற்குள் மாற்று சினிமா பற்றி பேச முடியும். அதுவரை நாம் விமர்சனங்கள், கருத்துபகிர்வு என்ற பெயரில் அந்த அதிகார மையங்களில் அடிவருடிகளாக, அடிப்படைகளை கூட கேள்வி எழுப்ப தெரியாத சூழலிலேதான் வாழ வேண்டியிருக்கும்.

இக்கட்டுரை தமிழ் சினிமாவின் கதையாடல்களை பற்றி அல்ல, தமிழ் சினிமாவில் நிழவும் கதைபிரதி, திரைக்கதை பிரதி தயாராகும் சூழலில் நிகழும் சம்பிரதாயங்களையும். சமரசங்களையும் நடைமுறைகளில் விளங்கிகொள்ளவும் கதை, திரைக்கதை பிரதி தேர்வு செய்யும் வழியாகவே தமிழ் சமூகமான கட்டமைப்பையும் கருத்தியல் பரப்பில் கதைதேர்வின் அபத்தை நிகழ்வும் எப்படி வெகுஜன கருத்து க்களாக தினிக்கப்படுகின்றது. என்பதையே இக்கட்டுரை விபரிக் கும் தளம்.
“திரைப்படம் சமூகத்தை மாற்றாது மாற்றியதுமில்லை நிறுவனமயமான சில இலக்குகளை தாக்குவது மிக சுலபம். தாக்குதல் பற்றி பொருட்படுத்தாத ஆட்களை தாக்கி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்லியவற்றினால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நிறுவனங்கள் இருக்கின்றன. அப்புறம் அந்த தாக்குதலால் என்ன பயன்?” என்கிற சத்தியஜித்ரயின் கருத்தின் அடிப்படையில் நாம் எவ்வளவுதான் தமிழ் சினிமாவைப் பற்றியும், அதனை இயக்கும் இயக்குனர், கருத்துதலத்தை விமர்சித்தாலும் எவ்விதமான மாற்று சிந்தனையும் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது. அடிப்படைகளை, கருத்தியல் அதிகாரங்களை கதைகள் என்கிற பெயரில் ஆதிக்க வர்க்கத்தினரின் அறம் ஒழுக்க மரபுகளை திரைக்கதை பிரதிகளாகத் தேர்வு செய்யும் வியாபார வர்க்கத்தினரை நாம் கேள்விக்குட்படுத்தாதவரை நம்முடைய விமர்சன குரல்கள் எம்முறையில் இருந்து ஒலித்தாலும் அது வியாபார வெற்றிக்கான உத்திகளாகவே முடியும். More

Advertisements

பிரிவின் பாடல்


மெல்லிய ஈர காற்றில்
ஜன்னல்களும் கதவுகளும்
சப்தம் வரு திசைக்கு
அழைக்கின்றது…

வெறுமை சூழும்
என் அறைகளில் மங்கலான
நாளில் உனது ஞாபகங்கள்….
விவாகரத்து நோக்கி
செல்லும் மண வாழ்வின்
முடிவுகள்…..
உணர்வுகளின் தீராத
நினைவுகள் மட்டும்
மனசாட்சிகளை போட்டு
உழுக்கின்றது….

காற்று வீசிய
பூமரத்தின் உதிர்ந்த
செம்மலர்கள் போல
தரையில் கிடக்கும் உயிராக
உன்னை குறித்து எழில்
எனது பாலைவன நினைவில்
தீராத காயங்கள்
மிஞ்சுகின்றது……

ஒலி அறுந்த நாடாவை
போல
நம் பாடல்கள்
தடைப்பட்டு
சூனியமாகின்றது
ராணுவம் சுற்றித்திரியும்
எனது தெரு முனை போல….

பகிரப்படாத கவிதைகள்


 

எழுதமுடியாத

கவிதைகளாக நம்

காதலின் மிகுதிகள் மட்டும்

நம்மில்

மிஞ்சி போனது

நீ

எழுதிய போல், எப்போதும் எம்மில்

பகிரப்பட்ட எச்சங்களாய்

நம் கவிதைகள் மடடும்

என்றாய்

நிஜம்தான் பெண்ணே

விலகிச் சென்று

வெகு நாட்களான பின்பும்

திருமணம் கூடி

வேறொருத்தியோடு வாழ்வை

பகிர முடியாது

திசை தடுமாறிய

அந்நியனாகி போன

மிகுதி வாழ்வில்

நீ மட்டும்

மறக்க முடியாத

ரணங்களின் இசையை

என்னுள் எழுப்புகிறாய்

முதல் காதலையும்

முதல் முத்தத்தையும்

எங்கே சென்று நான் தொலைப்பது

போதும் இந்த வாழ்வு

என்றாலும்

சாவதற்கும் தையரிமற்று

மீளாத உனது ஞாபகங்களை

சதா காலமும் சுமக்கும்

இந்த தணியனி;ன்

மிகுதி வாழ்வு மட்டும்

என்ன ஆற்று வெளிகளின்

கவிதைகளை தரவா போகின்றது.

யார் மேலும்

எந்த புகாரும் இப்போதும்

இல்லை!

நொறுங்கிய கனவுகள்

உன்னை விட்டு பிரிந்த

நாளில் எனக்கு தெரியவில்லை

இப்போதுதான் நீ

என்னை விட்டு பிரிந்தது போல்

அறிகிறேன்

எப்போதாவது

உன்னுடன் கைகோர்த்து

ஒரே ஒரு நொடி நேரம்

அந்த ப10ங்காவில்

நினைத்து நினைத்து பார்த்தேன்

பாடலை பாடி

இறந்து விடவும்

இனியும் பிரியாமல் இருக்கவும்

எங்கேனும் ஒரு

சந்தர்ப்பம் தோன்றாதா என்றே

மனம் விசுவாசப்படுத்துகின்றது

அக்னி

ஆனாலும் அக்னி

உன் கவிதைகளை

படிக்கும் போது

நெருப்பு கள்ளிகளாய்

என் இதயம் எரிந்து கொண்டுதான்

இருக்கின்றது

மரணங்கள் பற்றிய சில குறிப்புகள்


எப்போதும்
எதுவும் நிகழ்ந்துவிடலாம்
என்ற நினைவுகளுடனே
கடக்க முடியாத
வாழ்வு என் முன்பு
நகரத்துக்கான
முன் தயாரிப்புகொண்ட
இருப்பின் பின் நழுவும்
உள் வறண்ட
கவிதைகளின் தனி
குரல் வளையங்கள்
நான்
காரணமற்று
கைது செய்யப்படலாம்
சிறவைக்கப்படலாம்
சித்திரவதையுடன் என்
‘நான்’ வீதியோரங்களில்
பிணமாக
து}க்கி வீசப்படலாம்
இன்னும்
வன்முறை நிகழலாம்
அவசரகால
சட்டங்களும்
தேடுதல்களும் இன்னும்
பிறவும் என்
பகல் பொழுதுகளையும்
அச்சுறுத்துகின்றது…
எப்போதும்
என் நாளை
குறி வைத்து துரத்தியபடி
துப்பாக்கிகள்
நான்
சிவிலியனாக இருப்பதனாலும்
இன்றும் சிரமங்கள்
வேலையற்று இருப்பதனாலும்
சந்தேகங்களுக்கு
சாட்சியாக மாறக் கூடும்

எந்த கணமும்
“நான்”க்கு
எதுவும் நிகழலாம்
நான்
இருப்பதனால்தான்
இருப்பின் விளிம்புகள்
ஊசலாடியபடி இருக்கின்றது

மரணம் கூட
அடையாளமற்று போகலாம்
நான்
ஓர் நாளில்
காணாமல் போகலாம்
ஏனென்றால் நாம்
வாழும் நாடு நம்மை
எதுவும் செய்யலாம்
மரணங்களை பற்றிய
குறிப்புகளை தயார் செய்யும்படி
நிர்பந்திக்கும்
வாழ்வின் வன்முறைக்கு முன்பு
“நான்”
என்ன நான்!

கண்ணாடி அறைகள்


 

நீண்ட பொழுதொன்றில்அறையெங்கும் பரவும்  

சூரியனின் செங்கதிரின் ஒளி நாளில்

காற்றின் மொழி வரிகள்

சுனியத்தின் இசை வரிகள் போல

வானத்தில் தனித்து

பறக்கும் பறவையின் தனிமை குரலின்

கையெழுத்தை திருத்தும்

நாள் ஒன்றில்

நிமிர்ந்த கனவொன்றின்

ப்யணிக்கும் தினபடி நாளில்

மனம் தேடும் புதிய உறவுக்கான

சந்திப்புக்கலின் ஏக்கங்கள் மீதமாக…

செம்மைப்படுத்தும் வரிகலுடன் சிரிபொலி பரவும்

அறையின் கண்ணாடி

வளையத்தில் மீனீன் மாதிரியாக கைதிகள்

கைதிகள் போல் சப்தம்

ஏதுமற்று

வழிப்போக்கனின்

தேடலாய்….

வாழ்வு நம் அன்றாட காட்சிகளை ஒரு கூனியக்கிழவியின் மாய

மாளிகையின் அடைப்பட்ட தவிப்பாய்

சிரிபிலும் புதிதாக பூக்கும் நட்பிலும் காற்று மொழியின்

 

கவிதை வரிகளுடன் பகிர்தல் படரும் கொடிமரமாய்…..!