எனக்குக் கவிதை முகம்’ அனாரின் நவீன கவிதைகள் பற்றிய சில ஞாபகக் குறிப்புகள்


மண் புழுவின் இரவு, குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம், பிச்சி, இல்லாத ஒன்று, வண்ணத்துப்பூச்சியின் கனாக்காலக் கவிதை, மேலும் சில இரத்தக் குறிப்புகள், காற்றின் பிரகாசம், பகிர்ந்துகொள்ளாத மாலை, எட்ட முடியாத அண்மை, பெண்பலி, உரித்தில்லாத காட்டின் அரசன், அரசி, மின்னல்களைப் பரிசளிக்கும் மழை, காதலை கொல்லும் தேவை, வெயிலின் நிறம் தனிமை, மனமந்திரம், இருப்பின் பின்னால் வாழ்வின் வெளிஇ கோமாளியின் கேலிப்பாத்திரம், நிறங்களானவளைக் காத்திருக்கின்றேன், எனக்கு கவிதை முகம், நான் பெண், தணல் நதி, பூக்க விரும்புகின்ற கவிதை, அறைக்கு வெளியே அலையும் உறக்கம், மாற்ற முடியாத வலி, நிழலின் அலறல், வரு(ந்)துதல், வெறித்தப்படி இருக்கும் கனவு, ஒளியில்லாத இடங்கள், விலகி நிற்பவன், பருவ காலங்களைச் சூடித் திரியும் கடற்கன்னி.இது அனாரின் எனக்குக் கவிதைமுகம் தொகுப்பிலுள்ள 31 கவிதை குழந்தைகளின் கூட்டு மொத்த தலைப்புகள் 54 பக்கங்கள் விரயும்
மனித வாழ்வின் நெளிவை மண் புழுவின் மொழியில் கிளறி கிளறி வாழ்வின் ருசியைப் தேடி அலைய செய்கின்றது. அனாரின் தொகுப்பை ஒரே நேரத்தில் அப்படி ஒன்றும் அவசரமாக படிக்க முடியவில்லைஇ முதல் கவிதை தரும் காட்சி படிமமும் அதன்
விசாலமும் இத்தாலி திரை மேதையின் சினிமா பரடையசோவையும் விந்து நூலின் சாமர்த்தின் இருட்டில் விடியும் காமத்தின் தீராத வேதனையையும் ஞாபங்களில் கொப்பளிக்க வைக்கின்றது. மண் புழுவின் இரவில்.

‘இந்த பொழுதை ஒரு பூக்கூடையாய் நிரப்பி தூக்கி நடக்கின்றேன் நீளமான நூலாய் தெரிகின்றது இரவு

நான் தனித்த மண் புழு சிறுகச் சிறுக நீளுகின்றேன்

தொடர்ந்து நீளமான வெள்ளை நூல் தெரியும் வரை ‘அனாரின் மொழி வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை உலக சினிமாவின் மிக உன்னதமான ருஸிய திரை மேதையின் தீராத திரைப்படிமத்தை இன்னும் தேடி திரிய செய்யும் அந்தரே தார்க்கோர்ஸ்;கியின்; கை வண்ணம் அனார் கவிதைதைகளை படிக்க படிக்க குகை மனநிலையில் ஒரு ஈமப் பிசாசை போல் மனத்தின் உள்ளடுக்கை ஊடுருவில் சென்று தைக்கின்றது. நமக்குள் கவிதைகள் ஊற்றையும் அது தூண்டிவிடுகிறது நல்ல படைப்பு படிப்பாளியையும் படைப்பாளியாக்கி விடும் என்பதுக்கு சினிமா மட்டுமல்ல மிகச் சிறந்த கவிதைகளுக்கும் இது பொருந்தி போவதை அனாரின்

எனக்கும் கவிதைமுகம் தெரிவிக்கும் இன்னொரு முக்கியமான செய்தி.

‘உனக்குள்ளேயே சுருங்கி கொள்வாயா அமைதி வெளியே இருக்கிறது

அமைதியான நிழல் தான் உள்ளே இருக்கிறது’

என்ற ஐரீஸ் முர்டாச்சின் வரிகளுடன் அனார் கவிதைகளுடன் பின் தொடரும் போது வெளியும் இயற்கையும்இ காதலும் வெளியில் இல்லை எல்லாம் உள்ளேதான் ஒழிந்து கிடைக்கிறது.

அன்பும் பரிவும் நேசமும் காதலும் தான் உள்ளே படிந்து கிடக்கும் பறவையின் கறுத்த சிறகை பிடித்து இழுத்து வருவது கவிதையின் அன்பு கரங்கள் தான். அமைதியும் சந்தோசத்தையும் மனித இருப்பின் மேல் நம்பிக்கை எனும் உடன்படிக்கையும் மெது மெதுவாக கற்பிதம் செய்வதோடுஇ இயற்கையும் பற்றிய பார்வையை அனாரின் மிக அற்புதமான படிமங்களையும் குறியீடுகளும் வாழ்க்கையை இவ்வளவு அந்நியோனியமாகவும்; ஏகாந்தமாகவும் காதலாகவும் பருகிவிட எப்படி இந்த அனாருக்கு மட்டும் முடிகின்றது. என்பதற்கான வியப்பும் என்னை விட்டப்பாடில்லை.

முதன் முறையாக ஒரு கவிதை தொகுப்புக்கும் எனது மனதின் அமைதியின்மையோடும், நிறம் திரிந்த வண்ணத்தோடும் பகிர்தலின் மூலம் உள்ளே ஆழ்ந்து கிடக்கும் எனது முகத்தையும் தேடி விடலாம் என்பதற்கான உத்தரவாதத்தை ‘இந்த எனக்கும் கவிதை முகம்’ ஒரு புரிப்படாத மன வலுவை தருகின்றது. இதுவரையும் உயிர் எழுத்து பக்கத்தில் மட்டுமே இவரின் கவிதைகளை எப்போதாவது அவசரமாக படித்து திருப்பிய போது இப்போது தொகுப்பில் படிக்கும் போது நிறைய வித்தியாசம் தெரிகின்றது. More

Advertisements