“எல்லாம் சினமாவும் அரசியல் தன்மை வாய்ந்தது”
-ஜோன் ஆபிரகாம்-
சினமாவுக்கு வாழ்க்கைதான் ஆதாரம். வாழ்க்கை என்ற நெருப்பு இல்லாமல் கலை, இலக்கியம், இசை, ஓவியம், சினமா எதுவுமே சாத்தியமில்லை. எல்லா கலை வெளிப்பாடுகளும் வாழ்வை முன் நிறுத்தியே உருவாக்கப் படுகின்றது. வாழ்வு இல்லாமல் உலகில் எதுவுமே இல்லை. வாழ்வை சொல்லாத கலை வெளிப்பாடுகள் கலையாக தீர்மானிக்க முடியாதபடிக்கு காலத்தின் பெரும் பள் சக்கரங்களில் கறைந்து போகின்றது.
“தினசரி வரலாற்றை நேரடி நிகழ்வாக மாற்றியமைப்பதற்காகஇ யதார்த்தத்தோடும், உண்மையோடும் உழைக்க வேண்டியது எப்படி அதிமுக்கியமோஇ அதே காரணங்களுக்காக உள்;ளடக்கத்தை குறைத்து மதிப்பீடவோ, ஏமாற்றவோ செய்யாத வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டியதும் முக்கியமாகும்”.
என்ற ஜார்ஜ் சான்ஜினோஸின் அறிவிப்புடன் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளும் கலைஞனின் தேடலுக்கான களங்களாக முன் நிற்கின்றது. வாழ்விலிருந்து கண்டறியப்பட வேண்டியது நிறைய உண்டு. நம்முன் நிறைந்திருக்கும் வாழ்வின் நடனங்களில், நளினங்களில், வலிகளில், துயரங்களில், சிரிப்புகளில், கனவுகளிலிருந்து சிலவற்றையாவது நாம் நம் இலங்கை தமிழ் சினமாவின் வெளிகளில் நிரப்புவோம். அப்படி நிரப்பப்படும் ஒவ்வொரு சினமாவின் மொழியிலும் இலங்கை தமிழ்; சினமாவின் சுய அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வின் அதி அற்புதமான கனவுகளை கண்டறிவோம்.
“சினிமா என்பது இருபதாம் நூற்றாண்டுக்கான புதியதொரு கலைவடிவம், சுய-வெளிபாட்டை விழைகிற இயக்குனர் ஒருவர் கையில் சினமா வடிவமானது சக்தி வாய்ந்த கருவியாக இயங்க வல்லது.”
திரைப்பட கலைக்கு இலக்கணம் வகுத்த சேர்ஜி ஜஸன்ஸ்hPன் மேற்கண்;;ட வாக்கு மூலத்துடன் நாம் நம் ஈழத்தமிழ் சினமாவுக்கான களங்களை தேடி கண்டடைவோம்.
சினமாவை குறித்து பேசுவதில் நாம் அனைவரும் சந்தேகமடைவது சினமா என்ற வசீகரிக்கும் அதி அற்புதமான சாதனம் மக்களின் உணர்வுகளை பாதிப்பதினால்தான். சினமா மக்களின் மனதை மட்டும் பாதிப்பதில்லை அவர்களின் நினைவுகளில், மனோபாவங்களில் மாற்றத்தை அல்லது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதுவும் உலகத்தின் சிறந்த திரைப்படங்கள் பேசும் மனித வாழ்வும் அதன் அக்கறையும் பார்வையாளரின் அகத்தை எளிதாக தாக்ககூடியது. உலக சினமா தரும் அனுபவ வெளிகளில் மனிதனின் உள்ளுணர்வுகள் செலுமைப்படுவதோடு உலகம் பற்றியும், வாழ்வின் ஆன்மீக தடங்கள் பற்றியும் மனிதனின் தேடலை சாத்தியப்படுத்துவதோடு, மனிதன் பற்றிய மர்மங்களை, வாழ்விலிருக்கும் புதிர்களை கண்டறிவதற்கும் சமூகத்தின் முரண்பாடுகளையும், அவலங்களையும், அதிகாரத்தின் இருப்பு தருகின்ற வன்முறையின் துயரத்தை யும் உலக சினமா பார்வையாளரின் மனத்திரையில் அகலப்பரப்புகின்றது. வாழ்வை புரிந்துக்கொள்வதற்கும், தெளிவடைவதற்கும் உலக சினமாவின் கலை உன்னதங்கள் பார்வையாளனுக்கு அணுக்கமானதொரு அந்தரங்கப் பிணைப்பை ஏற்படுத்துகின்றது.










