cinema is truth 24 frames per second - Jean Luc godard
சினிமாவை உயிராக நேசிப்பவன் நான்
சினிமா எனது ஆன்மா. சினிமாவை உருவாக்கும் திசை தேடி
பயணிக்கும் தற்சமயம் இந்த சினிமா ஆன்மா எனது எண்ணங்களின்
பகிர்தலை அலை வெளிகளில் பரப்புவதற்கான முயற்சிகள் மட்டுமே.சினிமாவை மட்டுமே எனது மன அயர்வை போக்குகின்றது.
சினிமாவை உயிராக நேசிக்கிறேன். வாழ்நாளில் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற ஆசையை தவிற வேறொன்றும் என்னிடம் தற்சமயம் வரை இல்லை.நல்ல சினிமாவுக்கான எல்லா வாசல்களையும் திறந்த வைத்து
காத்திருக்கிறேன், இந்த ஜன்னல்களில் நீங்களும் என் எண்ணங்களின் புள்ளியில் இனைவதாக இருந்தால் ஒரு பதிலை இந்த பக்கத்தில் பதியுங்கள்…!இப்படிக்கு
மாரி மகேந்திரன் – இலங்கை
mail: s_m_mahendran@yahoo.com
+94 716089428
———————————————————————
மத்திய மலைநாட்டில் பொகவந்தலாவ என்னும் சிறு நகரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் மகேந்திரன். தன் தந்தையின் பெயரையும் இணைத்து கொண்டு எழுதி வருகின்றார். ஆரம்பத்தில் சிறுகதை,கவிதைகள், தேசிய நாளேடுகளில் எழுதி வந்தவர். சினிமாவின் மேல் ஏற்பட்ட வேட்கையில் தமிழகம் சென்று தமிழக வெகுசன சினிமாவில் உதவி இயக்குனராகவும், திரைக்கதை பிரதியாக்கத்தின் பங்கேற்று சினிமாவின் மற்றொரு உலகமாகவும் மனித வாழ்வோடு நெருக்கமாகவும் உலவும் உலக சினிமா பற்றியும், பன்னாட்டு திரைப்பட விழாக்களுக்கு பார்வையாளனாகவும் சென்று வந்ததோடு, தமிழில் குறிப்பிடும் வகையில் நல்ல சினிமாவைப்பற்;றி எழுதியும்,பேசியும் நல்ல சினிமாவை மக்களிடம் கொண்டு செல்வதில் இவரது பங்களிப்பு கணிசமானது. “அறையின் தனிமை” என்ற இவரது குறும்படம் தமிழகத்தில் சிறந்த படமாக விருது பெற்றிருப்பதோடு, சினிமா குறித்தும் புத்தகங்கள், ஆவண திரைப்படம் சினிமா சஞ்சிகை என்று இவரின் பயணம் தொடர்கின்றது.—————————————————————————
இவர்கள் நம்மவர்கள் பபுண்ணியாமீன்
சினிமா துறையில் அதிகளவுக்கு ஈடுபாடு காட்டும்
எழத்தாளரும் கலைஞருமான மாரி மகேந்திரன்
நுவரெலியா அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு, பொகவந்தலாவ கிராமசேவகர் வசித்துவரும் மாரி மகேந்திரன் ஒரு எழத்தாளரும் கலைஞருமாவார். சுக்கிரன், மாரிமகேந்திரன், சங்கமித்தா,சுதா, ஆகிய பெயர்களில் எழுதிவரும் இவர், 1974ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதித சுக்கிரன் மாரி, சரஸ்வதி தம்பதியினரின் புதல்வராக டிபாகவந்தலாவையில் பிறந்தார். மாரிமகேந்திரன் தனது ஆரம்பக் கல்வியை பொகவந்தலாவ ஹொலிரோசல் தமிழ் மககா வித்தயாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கண்டி அசோக வித்தியாலயத்திலும் உயர்தரக்கல்வியை கம்பளை ஸாஹிராக் கல்லு}ரியிலும் பெற்றார். தற்போது இவர் வீரகேசரி வாரப இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கல்லுரியில் கற்கும் காலத்திலிருந்தே கலையார்வமும், வாசிப்புத்துறை ஆர்வமும் இவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. 1990 ஆம் ஆண்டு மனிதர்கள் எனும் தலைப்பில் இவரது முதல் சிறுகதை தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது.
இதைத்தொடர்ந்து இதுவரை 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 150க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 100க்கும் மேற்பட்ட சினிமாக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், வீரகேசரி, போன்ற தேசிய பத்திரிகைகளிலும், புதிய காற்று, தாமரை, ஜனனி, மற்றும் தமிழகத்திருத்து வெளிவரும் நிழல் போன்ற சங்சிகைகளிலும், தமிழ் சினிமா.உழஅ இனைய பத்திரிகையிலும் இடம்பெற்றுள்ளது. லண்டன் புதினம் பத்திரிகை சர்வதேச hPதியில் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது புதிய கதவுகள்எனும் சிறுகதை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் புதினம் பரிசுக் கதைகள் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. அதேபோல வீரகேசரி பவளவிழா சிறுகதைத் தொகுதியில் வீடும் அது சார்ந்த அறைகளும் எனும் இவரின் சிறுகதை பிரசுரமாகியுள்ளது.
இவரின் எட்டு சிறுகதைகள் உள்ளடங்கிய முதலாவது சிறுகதைத் தொகுதி புதிய கதவுகள் எனும் தலைப்பில் புரவலர்; ப10ங்கா வெளியீடாக அண்மையில் வெளிவந்தது. இத்தொகுதியில் இம்பெற்றுள்ள அனைத்து;க கதைகளும் தினகரனில் பிரசுரமானவையாகும்.
மேலும் திரைப்படதுறை சார்ந்த நூலொன்றினையும் வெளியிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதேநேரம் அகசலனம் எனும் தலைப்பில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றையும் ஆசிரியராகவிருந்து இவர் வெளியிட்டுள்ளார்.
புடைப்பிலக்கியத்துறையியைப் பார்கிலும் திரைப்படத்துறையிலே இவருக்கு ஆர்வமும், ஈடுபாடும் அதிகம். இது பற்றி மனம் திறந்து தன்னுடைய கருத்தைத் தெரிவிக்கையில், 5ஆம் வகுப்பில் நான் பார்த்த இயேசுநாதர்பற்றிய திரைப்படம் நசரேத் ஒப் ஜிஸஸ் சினிமா எனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து சினிமாவின் மேல் பெரும் காதல் எழுந்தது. ஆத்தோடு அம்சன் குமாரின் சினிமா ரசனை என்ற நூல் சினிமா பற்றிய சரியான பார்வையை எனக்குள் தூண்டியது. சலனம் என்ற சினிமா சஞ்சிகை நல்ல சினிமா உலகத்தையும், தேடலையும் தந்தது.
ஆத்தோடு ரூபவாஹினியில் சத்தியஜித்ரேயின் படங்களும், குரோசாவின் படங்களும், சிங்கள படங்களும், சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் எனக்குள் அக மாற்றத்தை ஏற்படுத்தியது.
சுpனிமா பற்றிய கனவு வளர்ந்தது. உயர்தர கலைப்பிரிவில் கற்றுக்கொண்டிருந்த போது சினிமா வெறியில் தமிழகம் சென்றேன். ஆதன் பின்பு நான் வளர்ந்த சூழலுக்கும் நான் சந்தித்த சினிமா உலகமும் எனக்குள் அந்நியமாக தோன்றியது. ஆத்தோடு பயிற்சிக்காகவும், திரை தொழில் நுணுக்கத்தை தெரிந்து கொள்ளவும் பல வர்த்தக படங்களில் பணிபுரிந்தேன். முpக மோசமான அனுபவங்களை பெற்றேன். ஆனால், சென்னை சென்ற பின் முதல் முதலாக திரைபபட சங்கங்களைத் தேடி நல்ல சினிமாவையும், உலக சினிமாவை பார்ப்பதற்கும், கலந்துரையாடலின் மூலம் தீவிர சினிமாவுக்கான தேடல் வளர்ந்தது. நல்ல சினிமா பற்றிய தேடல் இருப்பவனுக்கு தமிழ் சினிமா எந்த விதத்திலும் உதவாது என்ற விரக்தியோடு மீண்டும் எனது தாயகம் திரும்பினேன் என்ற கூறுன்றார்.
1996ஆம் ஆண்டு இந்தியா சென்ற இவர் சுமார் ஒராண்டு காலம் ராஜ் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். இக்காலக்கட்டத்தில் திரைப்படத்துறை சார்தோருடன் ஏற்பட்ட தோடர்பு காரணமாக கதாசிரியர் ஆர்.செல்வராஜ், தங்கர்பச்சான் ஆகியோருடன் இணைந்து சில திரைப்படங்களுக்கு வசன கர்த்தாவின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.இக்கால கட்டத்தில் பொட்டு அம்மன், தாஜ்மஹால், வாட்டக்குடி இரணியன், உப்பு, ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது. புpன்பு அமுதன் என்ற இயககுனரிடம் உதவி இயக்குனராக ரகசியமாய் என்ற தமிழ் திரைப்படத்தில் பணியாற்றினார். இத்திரைப்படத்திலே இவர் முழுமையாக ஒரு தரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றயமை குறிப்பிடத்தக்கது.
ரகசியமா திரைப்படத்தின் …..
பின்பு 2002 ஆம் ஆண்டில் ஜோசப் செல்வராஜ், கீரா.மூர்த்தி ஆகியோரிடன் தமிழு, கனவானவன், ஆகிய குறும்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் யஎஅ நிறுவனம் தயாரித்த ஆர்த்தி, கீதாஞ்சலி, ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் உதவி திரைக்கதையாசியராக பணிப்புரிந்துள்ளார்.
அதேநேரம், இந்தியாவில் காலத்துக்குக் காலம் நடைபெற்றவரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பத்திரிகையாளராக பங்கேற்றுள்ளார்.
இவரது இயக்கத்தில் வெளிவந்த குறுந்திரைப்படம் அறையின் தனிமை என்பதாகும். குறைந்தபட்சமான செலவை கொண்டும், கிடைத்த தொழில்நுட்பத்தைக் கொண்டும் காலச்சுவடு சஞ்சிகையில் ஹவி எழுதிய தீட்டு என்ற சிறுகதையை தழுவியே அறையின் தனிமை என்ற குறும்படத்தை இவர் இயக்கியுள்ளார். 20 நிமிடங்களைக் கொண்ட இத்திரைப்படம் வசனங்கள் மிகக் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்குறுந்திரைப்படம் திருப்பூர் குறுந்திரைப்பட விழாவில் சிறந்த குறுந்திரைப்படமாக விருது பெற்றது. ஆத்தோடு குறம்பட பிரதி சென்னை புத்தக திருவிழாவில் விற்பனை செய்யப்பட்டது.துpரைப்பட விழாக்களில் பார்வையாளராகக் கலந்துகொண்ட அனுபவங்களையும், சர்வதேச சினிமா கலைஞர்களுடன் நேர்காணல்களை பதிவுகள் செய்து அதனூடாகப் பெற்ற அனுபவங்களையும் வைத்து உலக சினிமாக்களையும் நம் தமிழ் சமுகத்திடம் இனம்காட்ட வேண்டும் என்ற வேட்கையுடன் செயல் பட்டு வரும் இவர், மலையகத்தில் முதல் திரைப்பட சங்கமான அட்டன் ஃபிலிம் சொசைட்டியை ஆரம்பித்து தரமான திரைப்படங்களை திரையிடுவதுடன், தரமான திரைப்படங்களை பற்றிய கருத்துக்களை மக்கள் முன் வைத்து செயல்பட்டு வருகின்றார்.
நல்ல சினிமா பற்றி இவர் எழுதிய 20 வார தொடர் கட்டுரை தினக்குரல் வாரமஞ்சரியில் ஈழ சினிமா – சில குறிப்புகள் எனும் தலைப்பில் பிரசுரமானது, இக்கட்டுரைத் தொடர் ஒரு சிறந்த சினிமா பற்றிய எண்ணக் கருக்களை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்துவதாக அமைந்திருந்தது. மேலும், தனது நண்பர் ப.திருநாவுக்கரசுடன் இணைந்து நிழல் சினிமா சஞ்சிகையில் பல காத்திரமான சினிமாக் கட்டுரைகளையும், நேர்காணல்களையும் இவர் எழுதியுள்ளார். நிறம் என்ற பெயரில் உலக சினிமாவுக்கான ஒரு காத்திரமான சினிமா சஞ்சிகையை நடத்தி வருகின்றார்.
தன்னுடைய இலக்கயத்துறை, பத்திரிகைத்றை, கலைத்துறை ஆகியவற்றுக்குக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் எனற அடிப்படையில் தனது பள்ளி அதிபர் தமிழறிஞர் சி.நடராஜா அவர்களையும், சினிமாவில் முன்னோடி இயக்குனர் பாலுமகேந்திராவையும். ஆந்தனிஜிவா, நண்பர் நித்தியானந்தன், தங்கர்பச்சான், ஹவி, விஸ்வாமித்திரன்,சிவகுமார் கணேஷ், இளம் பரிதி, ஆகியோரையும் இன்றும் நினைவு கூர்ந்துவருகின்றார்.
நன்றி:
தினகுரல் வாரவெளியீடு –
16 நவம்பர் 2008




NANBA,
NALLA CINEMAVAI NOKKIYA UN PAYANATHIL – THEDALIL ENNAYUM INAITHULK KONDATHIL MAHILCHI. UN MUYATCHIGAL SIRAKKA – VETRI PERA EN VALTHUKKAL.
CINAMAVAI PARPAVARGALAI , RASIPPAVARHALAI , URUVAKKUBAVARGALAI KANDIRUKKIREN – VIYANTHIRUKKIREN . MUTHALMURAIYAGA CINEMAVAI KATHALIPPAVANI UNNIL KANDEN – ATHALAL NANUM CENEMA MEETHU KATHAL KONDEN.
VALGA VALAMUDAN
INDRU MUTHAL
SHAKTHI RAMAESH
By: SHAKTHI RAMAESH on May 5, 2008
at 9:02 am
welcome to your blogspot
Thayananthan
Jaffna.
By: thayananthan on September 22, 2008
at 1:55 pm
hai,
ur writing z very good.continue ur skill.plz write more kavithai.
nothing more
ur friend
By: ROSHANIEE.S on November 9, 2008
at 7:12 am
Dear Mahendran.
I am Surya from Chennai India. Lover of good movies like you.
இந்த ஆதங்கமும் வேதனையும் எனக்கும் உண்டு.
ஆனால் குழந்தைகளுக்கான திரைப்படம் பற்றி யாரும் கவலை படுவதாக தெரியவில்லையே ..??
ஹாலிவுட்டில் எத்தனை திரைப்படங்களை எடுத்து குழந்தைகளை மகிழ்விப்பதுடன் வசூலிலும் வாரி குவிக்கிறார்கள் எனப்தை தமிழ் சினிமா உலகம் உண்ரவே உணராதா ..??
Plz visit my blog about International & kids movies and post your comments.
By: Surya on January 25, 2009
at 7:46 pm
Hello. And Bye.
By: XRumerTest on March 17, 2009
at 10:59 am
Plz visit my blog on International Movies.
Hope you will like it.
Surya
Chennai
By: surya on April 21, 2009
at 10:31 am