பகுதி 2

5.அபிஷேகம்


அவர் ஒரு நிறைவான அபிஷேகம் உள்ளவராக இருந்தார். பழைய ஏற்பாட்டில், இரட்சகர்கள், நியாயபதிகள்,தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஞான திருஷ்டிக்காரர்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் இப்படி தேர்வு செய்தவர்களிடமே ஆவியானவர் இருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில்

‘மாமிசமான யாவர் மேலம் ஆவியானவர் இறங்கி வந்தார்’ அதற்கு காரணம் என்ன? இயேசு கிறிஸ்துவை குறித்து பைபிள் சொல்கிறது. யோவான் சுவிஷேம் 3:34 வசனம்,
‘தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.’
தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்தார்.

Unmeasureable Spirit  அளவிட முடியாத பரிசுத்த நிறைவு, இயேசு சொன்னார் ‘நான் போவதை குறித்து கலங்க வேண்டாம்.. நான் போவது நல்லது, நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் வாரன் உங்களிடத்தில் வாரன் நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரமாட்டார்’ இயேசு போனார். இந்த பூமியிலே இயேசு இருந்த போது எப்படி அளவில்லாத தெய்விக ஆவியில’ நிரப்பபட்டிருந்தாரோ அதே பிரசன்னத்தோடு பரிசுத்த ஆவியானவர் இந்த முழு உலகத்தையும் திருப்த்திப் படுத்த இறங்கி வந்தார்.
ஒரு மனிதன் சாதாரணமாக இயேசுவை நோக்கி கூப்பிடுகிறார் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறார். ஆவியானவர் பெலப்படுத்துகிறார், நிறைய பேர் சொல்றாங்க பரிசுத்தமாக இருந்தால் ஆவியானவர் இறங்கி வருவார் என்று. உண்மைதான் தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறவர்தான். ஆனால் வேதம் சொல்கிறது மாம்சமான யாவர் மேலும் நம்மை சரி செய்வதற்காக ஆவியானவர் இறங்கி வருகிறார். நம்மை சரிப்படுத்துவதன் வேலை பூமியானது ஒழுங்கின்று வெறுமையுமாய் இருந்தது.

ஜலத்தின் மீது ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். ஓளித்தன்மையாக இருக்க கூடிய இந்த உலகத்தின் மீது ஆவியானவர் அசைவாடுகின்ற போது அந்த மனதனை கர்த்தர் சரிப்படுத்துகிறார்.
மூன்றரை வருடம் செய்யத ஊழியம் இன்று முழு உலகத்தையும் பற்றிப்பிடித்திருக்கின்றதன் காரணம் இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அளவில்லாத அபிஷேகம். தேவனுடைய அபிஷேகம் அவருடைய தனித்தன்மையை நமக்கு காண்பிக்கிறது. கனுக்கால் அளவல்ல, முழங்கால் அளவல்ல, இடுப்பளவல்ல நிச்சயமாக அவ்விதமான தனித்தன்மை உடையவராக இயேசு இருந்தார். இன்றைக்கு தமமுடைய பிள்ளைகளுக்கு அந்த பிரசன்னத்தை தருகிறார். நீங்கள் விரும்பினால், தாகத்தோடு வாஞ்சித்தால், இயேசு அந்த பிரசன்னத்தை நமக்கு தருவார்.

அருளா? இருளா?
நான் என் 17 வயதில் கிராமங்களுக்கு ஊழியம் செய்வதற்காக போகும் போது பெரியவர்களிடையே ஆண்டவரின் வாக்கை சொல்வதற்கு எனக்கு கஷ்டம். தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆகவே நான் 17 வயது இறுதியிலே ஆணடவரின் பணியை செய்ய தொடங்கினேன். கிராமங்களுக்கு சென்று பாடல்கள் பாடி சிறுபிள்ளைகளுக்கு கதைகளை சொல்லி கொடுப்பேன். ஒரு கிராமத்திலே சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுத்து முடித்துவிட்டு அவர்களுக்கு ஜெபிப்பதற்கு கற்றுக்கொடுத்து கொண்டிருந்தேன். அங்கே சுற்றிலும் சில பெரியவர்கள் சிறு பிள்ளைகள் கை கூப்பி ஜெபிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாhகள்.

அங்கே தீடிரென்று ஒரு பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலற ஆரம்பித்தது. அவர் வேடிக்கை பார்க்க வந்த தாய், உடனே இந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருந்த ஜெபத்தை நிறுத்தி விட்டு அந்த அம்மாவுக்காக ஜெபித்தோம் இயேசு சுகத்தை கோடுத்தார். ஜெபித்து முடித்தவுடன் இன்னொரு பிசாசு அலற ஆரம்பித்தது. ஒரே நாளில் மூன்று பேருக்கு அந்த பிசாசினுடைய போராட்டம். வெகு நேரமாகி விட்டது கடைசியாக ஒரு பெண்னை விட்டு போக மறுத்தது. அது வரைக்கம் என்னை தம்பி தம்பி என்று சொன்னவர்கள் எல்லோரும் சாமி’னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைத்து விட்டது. இரண்டு பிசாசை விரட்டியவுடன். மூன்றாவதாக இரந்த பிசாசை விரட்டி இன்னும் கொஞ்சம் பதவி உயர்வை வாங்கலாம் என்றால் முடியலை. நானும் ஜிவனைக் கொடுத்து கத்திப்பார்த்து விட்டேன். ஆந்த பொண்ணு வாயை திறக்கவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீர்வடிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும். தற்காலிகமாக நான் தப்பிக்க வேண்டும். நான் சொன்னேன் ‘நாளைக்கு நான் விரதத்தோடு வர்றேன் இந்த அம்மாவும் விரதத்தோடு இருக்க வேண்டும்… பச்ச தண்ணீர் கூட குடிக்க கூடாது…’ சொல்லிவிட்டு போய் விடடேன் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. நான் இப்படி ஜெபம் பண்ணினேன். ‘அந்த ஒரு பிசாசை மட்டும் விரட்டிருங்க அப்பா… தயவு செய்து விரட்டிருங்க…’ நாம அங்கே போய் பிசாசிடம் இப்படி கெஞ்ச முடியாது எங்கள் ஊரில் இப்படி ஒருவர் பிசாசை விரட்டியிருக்கிறார் ‘பொல்லாத பிசாசே போறையா இல்லையா…அந்த பிசாசு போக முடியாது…நீ என்ன செய்வ…? வேறு என்ன செய்வது… சான் போறேனு போயிட்டார்…’
நானும் இரவு முழுவதும் ஜெபிக்கின்றேன் ஆண்டவரே தயவு செய்து இரண்டு பிசாசை விரட்டினீங்க Help Me Lord… தூங்கல காலையில் கொஞ்சம் அரை குறை தூக்கம் காலையிலேயே அந்த இடத்திற்கு போனேன். எனக்கு பயங்கர வரவேற்பு.

இதோ சாமி வந்திட்டாருனு சொன்னாங்க…ஒரே உட்சாகம்தான் நான் இங்கே நான் அங்கே யோய் பிசாசு பிடிச்ச அந்த அம்மா தலையில கை வைத்து மறுபடியும் ஜெபிக்க ஆரமடபித்தேன் அஞ்சவே இல்லை. ஒரு மாற்றமும் இல்லை ரொம்பவும் சோர்வாகி விட்டது.

அந்த சமயத்தில் ஒரு பெரிய பிரச்சினை அந்த ஊரில் தீடீரென்று ஒரு அம்மா மீது அருள் வந்து இறங்குமாம். ஆவங்க திருநீரை யார் மீது எடுத்து போட்டாலும் உடனே பிசாசு போயிருமாம். ஆதை அவர்கள் அருள் என்கிறார்கள் நாம் இருள் என்கிறோம். ஆக அந்த அம்மாவுக்கு நான் விரட்டும் போது பிசாசு வந்திருச்சி அது ஆட ஆரம்பித்தது. அது வரைக்கும் என்னை சாமி சாமி என்று சொன்னவர்கள் இப்போது தம்பி நீங்க விலகிக்கிங்க என்றார்கள். சட்டென்று எனக்கொரு பதவி பறிப்பு. ரொமபவும் சோர்ந்திருச்சி உள்ளம். அந்தம்மா ஒரு கையில் வேப்பிலை ஒரு கையில் திருநீர் தட்டு நாக்கை மடிச்சி வைச்சிகிட்டு இங்கிருந்து விலகு என்றது.
ஆக கடைசியில் பாருங்கள் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை பக்கென்று என்னை விலக்க சொல்லிட்டாங்க அந்த பிசாசு என்னை விலகிக்க சொல்லிருச்சி. இங்கே நான் இருக்கிறேன் பிசாசு பிடிச்ச அந்த அம்மா முழங்கால் போட்டு உட்கார்ந்திருந்தாங்க. அவங்க சொன்ன பிறகும் நான் சுயம்பு லிங்கம் மாதிரி  மாறவே இல்லை அசையேவே இல்லை. அந்த சமயத்தில்தான் என் உள்ளம் கதறுகிறது. பரிசுத்த ஆவியானவரே நீர் வாரும் தயவு செய்து வாரும். நான் தோற்றுப் போகலை நீங்க தோற்றுப் போறீங்க அவ்வளவுதான். ஒரு யானை பலம் வந்தது மாதிரி இருந்தது எனக்கு. அந்த அம்மாவை பார்த்து சொன்னேன்

‘ வராதே கிட்டத்திலே’ அப்படியென்று சொன்னேன். பக்கத்தில் நின்று பேச முடியாத நான் அவ்வளவு பேருக்கும் முன்னாடி அந்த அம்மாவைப் பார்த்து சொன்னேன். எல்லோரும் சாமி’னு கும்பிடுறாங்க அந்த அம்மாவை. Holy Spirit னுடைய செயல்பாடுகளை பாருங்கள் பக்கத்தில் வராதேனு சொன்னேன். அந்த அம்மா கேட்கலை முன்னாடி ஸ்டெப் எடுத்து வந்தாங்க என் பக்கத்தில் வந்தாச்சி. திருமநீறு எடுத்து அந்த அம்மா மீது போட போனார்கள். பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
இயேசுவின் நாமத்தினால் கட்டளை இருகின்றேன் போ பிசாசே…! என்று அந்த அம்மாவை அதட்டினேன் இப்போது. முதல்ல பெரிய ஆளை தாக்கி போட்டுட்டு அந்த அம்மாவை ஒரே அடி அடிச்ச மாத்திரத்திலே அந்த அம்மா கீழே விழுந்துட்டாங்க. அன்றைக்கு விழுந்த அம்மா அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. அதன் பிறகு இந்த பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலறி ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இந்த பெண்ணுக்குள் இருக்கின்ற கருவை நான் அழிசத்திருக்கின்றேன். குழந்தை பாக்கியம் இல்லாமல் பண்ணுறது நான்தான் என்று சொல்லி அந்த ஆவி பேச ஆரம்பித்தது. அதற்கு பிறகு மூன்று பிள்ளைகள் அந்த பெண்ணுக்கு பிறந்தன. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.

Holy Spirit வை தேவனுக்குள் அளவில்லாத ஆவியானவரை நாம் விரும்பம் போது விடுதலை ஊழியத்தில் கர்த்தர் நம்மை பயன்படுத்துவார். அசுத்த ஆவியின் பிடியில் கட்டப்பட்டிருக்கின்ற மக்களை மிக எளிதாக வெளியே கொண்டு வர முடியும். ஆகவே

இயேசுவின் தனித்தன்மை அளவில்லாத அபிஷேகம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

6. உலக மேன்மையை விரும்பாத சுபாவம்.
இயேசு உலக மேன்மையை விரும்பாத ஒரு சுபாவம் கொணடவர். அவர் நினைத்திருந்தால் அந்த தேசத்திற்கு ராஜாவாக மாறி இருந்திருக்கலாம். பலமுறை அவர் சொன்னார் நான் இந்த உலகத்துக்குரியவன் அல்ல என்று.
நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.
யோவான் 17:16
என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்துக்குரியதல்ல என்றார் இயேசு.
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3:17
இந்த உலகத்துகுரியவன் அல்ல நான் இந்த உலகத்தில் உள்ளவன் இந்த உலகத்தை குறித்தே சிந்திக்கிறார்கள். ஆப்படிதான் பிலிப்பியருக்கு எழுதுகிறார் பவுல்
‘உலகத்தில் இருந்து வர கூடிய எந்தவொரு புகழையும் நான் விரும்பவில்லை.’
ஒரே ஒரு சம்பவத்தை மாத்திரம் இயேசுவின் வாழ்விலிருந்து எடுத்துக் காட்டுகின்றேன். ஒரு வேலை இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஒரு வேலை லூக்கா சுவிஷேசம் புத்தகத்தை நான் திரும்ப திரும்ப வாசித்த போது இந்த காரியத்தை ஆண்டவர் என்னிடம் வெளிப்படுத்தினாh. இயேசு ஒரு காரியத்தை சொல்கிறாh. அந்த வார்த்தை என்ன சொல்கிறது,
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

லூக்கா 6:26
உங்களை எல்லோரும் புகழ்ச்சியாக பேசினால் ஐயோ ஐயையோ! அதன் பொருள் என்னவென்றால் ஆபத்து வருகின்றது என்று அர்;த்தம் யாரையாவது உங்களைப் புகழ்ந்து பேசினார்கள் என்றால். ;அண்ணே நீங்கள் நல்லவரு, வல்லவரு பெரியவருனு சொன்னாங்கனா? நம்மை போட்டு புதைப்பதற்கு குழி தோன்றுகிறார்கள்’ என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இயேசு இதை ஏன் சொன்னார்? ஆகவே அலருடைய உபதேங்களை கவனித்தால் முன்போ பின்போ அதற்குரிய அனுபவங்கள் அல்லது நிகழ்வுகள் இருக்கும். லூக்கா சுவிஷேச புத்தகம் 4ஆம் அதிகாரத்தை திருப்பி கொள்ளுங்கள் எல்லா மனுசங்களையும் புகழ்ந்து பேசாவிட்டால் உங்களுக்கு ஐயோன்னு சொன்னரே இவருக்கு வந்த அனுபவத்தை பாருங்கள். லூக்கா 4:15 சொல்கின்றது,
அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
20 வசனம் அதனுடைய இறுதி பகுதி
ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. லூக்கா 4:20
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.லூக்கா 4: 22
ஏல்லோரும் அவருக்கு  நற்சாட்சி கொடுத்தார்கள். இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,லூக்கா 4:28
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்தவர்கள்.
எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். லூக்கா 4:29
அவரை தலைகீழாக தள்ளிவிடும்படிக்கு கொன்னு விடும் படிக்கு ஒன்று சேர்ந்தவர்கள் யார்? அவரை புகழ்ந்நவர்கள்தானே. ஆகவே இந்த அனுபவம் அவருக்க இருந்ததனால்தான் லூக்கா 6:26  அதிகாரத்தில் இப்படி சொல்கிறார்.
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
ஜாக்கிரதை ! ரொம்ப ஜாக்கிரதை !! எச்சரிப்பு , யாராவது உங்களை புகழ்தார்கள் என்றால் உங்களுக்கு ஐயோ. ஆகவே எந்த விதத்திலும் இயேசு இந்த உலகத்தின் புகழ்ச்சிக்காக, உலகத்தின் மேன்மைக்காக அடியணியவே இல்லை. யார் அவரை மயக்கவும் முடியாது.
அவர் மிக கவனமாகவே இருந்தார். நிறைய நேரங்களிலே நாம் உலகத்தின் புகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றோம். எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். That is Human Nature. மனித இயல்பு அது.

ஆனால் வேதம் என்ன சொல்கின்றது அப்படிப்பட்ட விஷயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டாதீர்கள் அதெல்லாம் வீண் நம்மை புகழ்ந்தும முகஸ்துதித்து பேசுகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் தூசித்தும் பேசுவார்கள். எந்த விதத்திலும் இந்த உலகத்தின் மேன்மையின் மீதும் நமக்கொரு ஆசை வந்து விட கூடாது. ஊலக மக்கள் என்ன நினைக்கிறார்கள் இந்த  உலகத்தின் மேன்மைக்காக இன்மைக்குரிய ஆசீர்வாதங்னளுக்காதான் கிறிஸ்துவை பின் பற்றுகிறார்கள். இந்த உலகம் நம்மை பாராட்டா வேண்டாம். நமக்கு இந்த உலகத்திலே புகழ்ச்சி வேண்டாம் நம்முடைய மேன்மை கிறிஸ்முக்குள்ளதகவே இருக்கட்டும். ஒரு அருமையான வசனம்,
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டுஇ தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. 2கொரிந்தியர் 10:12
தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறவர்கள் புத்திமான்கள் அல்ல,  கர்த்தரால் புகழப்படுகின்றது உத்தமன் என்று அதிகாரத்தின் இறுதியிலே வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

7. பரிசுத்தம்


இயேசு எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவர். அவரை போல யாரும் பரிசுத்தவான் இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நான் பரிசுத்தர் ஆகவே நீங்கள் பரிசுத்தவானாக இறுங்கள்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
1பேதுரு 1:15,16
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 5:48
அவர் பூரண சற்குணராக இருக்கிறார். பரிசுத்தராக இருக்கிறார். கிறிஸ்த்துவை அறிந்து கொள்கிற நாம் அந்த பரிசுத்தத்தை பெற்றுக்கொண்டு வருகின்றோம். பரிசுத்தம் என்கிற விசயத்தில் தேவன் தனித்தன்மை வாய்ந்தவர். ஆகவேதான் அவருடைய ரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது.
கர்த்தாவேஇ நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணிஇ உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காகஇ

நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவிஇ உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். சங்கீதம்26:6-7
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!எபிரேயர் 9:14,
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்துஇ தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிஇ கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். எபிரேயர் 10:29
அந்தப்படியேஇ இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிஇ நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:7
உண்மையுள்ள சாட்சியும்இ மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்இ பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. வெளி 1:5
கிறிஸ்த்துவின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது அவர் பரிசுத்தராக இருப்பதனால் அவரின் இரத்தம் பரிசுத்தமாக்குகின்றது அவரின் வசனங்கள் நம்மை பரிசுத்தமாக்குகஜன்றது.
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படிஇ அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.யோவான் 17:19
ஆகையால்இ சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.எபேசியர் 5:24
அவருடைய சத்தியத்தால் பரிசுத்தமாக்குகிறார் அவருடைய வசனமே சத்தியம், அவருடைய பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம் படுத்துகிறார்.
அப்படியிருந்தும்இ சகோதரரேஇ புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுஇ தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குஇ நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுஇ
ரோமர் 15:15
கர்த்தருக்குப் பிரியமான சகோதரரேஇ நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்இ சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்குஇ ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலேஇ நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 2தெசலோனிக்கேயர் 2:13

இந்த வசனங்கள் பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்குகின்றது. அவர் பரிசுத்தமாக இருப்பதனாலே அவர் நம்மை பரிசுத்தமாக்குவதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். பரிசுத்தம் இல்லாமல் தேவனுக்காக எதையும் செய்ய முடியாது. என் வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் நான் பரிசுத்தரான தெய்வத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியாது. ஆகவே உம்மை போல என்னை பரிசுத்தம் உள்ளவனாக மாற்றும். ஆகவே பரிசுத்தம் என்பது கூட உடனே நமக்கு முழுமையாக கிடைத்து விடும் என்பது அல்ல. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் இந்த பூமியில் இருக்கின்ற வரை நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

(இலங்கை கிராமிய சுவிஷேச வேவையின் 18 வது வருட நிறைவை முன்னிட்டு கடந்த மே மாதம் 16,17,18- 2011 அன்று நுவரெலியாவில் நடந்த மிசனரி மகாநாட்க்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தேவ செய்தியாளர் சகோதரர் வே.கைவல்யம் டேவிட் ஆற்றிய உரையின் தொகுப்பு)

Advertisement

Comments are closed.

Follow

Get every new post delivered to your Inbox.