இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மை

சகோ.வே.கைவல்யம் டேவிட்

‘கிறிஸ்து இயேசுவிருலிந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,’
பிலிப்பியர் 2:5
நாம் சிந்திக்கின்ற இந்த தலைப்பின் அடிப்படையில் அதாவது ‘கிறிஸ்துவின் தனித்தன்மை’ அவருடைய சிநதயை நோக்கும் போது நமக்கு விளங்கும் கிறிஸ்துவில் இருந்த சிந்தை என்ன? அதன் அடிப்படையில் ஆண்டவர் எப்படி தனித்தன்மை உள்ளவராக இருந்தார். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எப்படி கிறிஸ்துவை கவனிக்க வேண்டும்? அதை குறித்தே நாம் சிந்திக்க போகின்றோம்.
கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு அந்த தெய்வீக சுபாவங்களுக்கு நம்மை அர்ப்பணிக்கா விட்டால், தேவனுக்காக எந்தவொரு பெரிய காரியத்தையும் இந்த பூமியில் செய்து விடவே முடியாது. ஒருவேலை மூன்று வருடங்களோ ஐந்து வருடங்களோ இந்த வேதாகம ஆராச்சிகளை செய்து வேத கல்லூhயிpல் படிப்பதினாலோ நாம் சாதித்து விட முடியாது. தனிப்பட்ட முறையிலே உண்மையான உள்ளத்தின் ஆழத்திலே ஆசையோடும் தாகத்தோடும், இந்த திருமறையிலே கிறிஸ்துவின் தனித்தன்மை என்ன என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து உங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்தால் நிச்சயமாக ஒரு அற்புதமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வீர்கள். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை நம்மால் வாழ முடியும். வெறுமனே படிப்பதனால் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை.

இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொள்வோம், கிறிஸ்துவில் என்ன சிந்தை இருக்கின்றது என்பதை கவனிப்போம், கிறிஸ்துவின் தனித்தன்மைகளை அல்லது தெய்வீக சுபாவங்களை அதாவது கிறிஸ்துவில் உள்ள The Divine Nature என்பதை நாம் மிகச்சரியாக புரிந்துக்கொள்ளவும், அதைக்குறித்து சிந்திப்பதற்கும் ஒரு நாள் அல்ல நாம் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஜெகத்தில் வாழ்ந்து உலகத்தில் ஜீவிக்கும் வரை யுக யுகமாய் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும்.

 

               1.அன்புள்ளவராக இருந்தார்

முதலாவது இயேசுவின் தனித்தன்மை அவர் அன்புள்ளவராக இருந்தார். அன்புக்கு இலக்கணம் இயேசுதான். ஒரு வேத வசனத்தை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். யோவான்13:1 இப்படி பேசுகின்றது,
‘தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.’
அவர் எப்படி அன்பு வைத்தாரோ முடிவு பரியந்தம் அதே அன்பை வெளிப்படுத்தினார், எப்படி அன்பை துவகத்தில் காண்பித்தாரோ அந்த அன்பிலே மாற்றம் இல்லை. தன்னைக் காட்டிக்கொடுக்க இருந்த யுதாஸ் காரியேத்தைப் பார்த்து துரோகியே என்று ஒருபோதும் கூப்பிடவில்லை. கொலைக்காரன் என்று குற்றம் சொல்லவில்லை.

‘சினேகிதனே…!சினேகிதனே…!’ என்றார் இயேசு, இது எப்படி முடிந்தது? அதுதான் கிறிஸ்து. ஆகவே அன்பிலே தனித்தன்மை வாய்ந்தவர். எந்தளவுக்கு அன்புள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் வாழந்து காட்டியுள்ளார். அன்பு ஒரு வார்த்தையில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும். இயேசு தன்னுடைய செயலில் காண்பித்தார்.

யோவான் 4ஆம் அதிகாரத்தில் பல ஆண்களை திருமணம் செய்த அந்த சமாரிய பெண்ணை அவர் கண்டித்து பேசவில்லை. அவள் தன்னுடைய புருஷன் இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை. பல ஆண்களை திருமணம் செய்தவள் என்பதை அவள் மறைத்து சொல்கிறாள். பாவமான வாழ்க்கை வாழ்கின்ற அந்த பெண்ணைப் பார்த்து கோபப்பட்டு கடிந்து பேசவில்லை இயேசு, மாறாக அந்த பாவ ஆற்றிலிருந்து அந்த குழியிலிருந்து அவளை தூக்கி விடவே எத்தனிக்கிறார். அன்பை வெளிப்படுத்துகிறார்.

‘உண்மைதான் உனக்கு  ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் இப்போது இருப்பவனும் உனது புருஷன் அல்ல, உண்மையை சொல்லுகிறாய் என்று சொல்ல வேண்டிய விதத்தில் அவர் சொன்னார். அந்த பெண்ணுடைய பாவத்தை அவர் வெளிப்படையாக சுட்டிக் கான்பித்து கடிந்து கொள்ளாமல் அந்த அன்பு உள்ளத்தோடு பேசினார். ஆனால் எல்லாம் தெரிந்த வேத பண்டிதர்கள் பரிசேயர் வேதபாரகர்களை அவர் சாடினார்.  அறியாமல் பாவத்தில் விழுந்து கிடக்கின்ற மக்களை குறித்து மனம் உறுகினார். அன்பை வெளிப்படுத்தனார். அந்த அன்பினால்தான் இன்றைக்கும் இலட்சக்கனக்கான கோடிக்கனக்கான மக்கள் இந்த அன்பு இரட்சகரை ஆராதனை செய்து வருகிறார்கள். இந்த சுவிஷேச ஊழியத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் பணி செய்வதற்கு அர்ப்பணித்திருக்கலாம. அல்லது இனிமேலாவது இந்த சுவிசேஷ வேலையில் நான் தோள் கொடுப்பேன் என்ற உணர்வோடு இங்கே வந்திருக்கலாம். அப்படியான உங்களுக்கு என் இதயத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றியை தெரிவிக்கிறேன்.

உலகத்திலே ஒரு மேன்மையான பணி உண்டானால் அது சுவிசேஷ பணிதான். நம்முடைய சுவிசேஷ வேலையில் நூறு வீதம் வெற்றியை காண வேண்டும் என்று சொன்னால் அதற்கு நமக்கு அன்புள்ள இதயம் வேண்டும். அன்பு இல்லாமல் நீங்கள் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின சுவிசேஷசத்தை மனப்பாடமாக பாராயணம் பண்ணினாலும் ஒரு மனுசனும் ரட்சிக்கப்பட மாட்டான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயம் அன்பை தொலைத்து விட்டது. வேதத்தை உயர உயர்த்தி சத்தத்தையும் கூடுதலாக்கி அவர்கள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது என்பது என்னுடைய கருத்து மாத்திரம் அல்ல தேவனுடைய கருத்தும் அதுதான். ஆகவே கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு தெய்வீக அன்பை நாம் பின்பற்ற வேண்டும்.

அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.
 யோவான் 4:8
ஆதனால்தான் இன்று  நாம் இங்கே இருக்கின்றோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். நீங்களும் இங்கு இருக்கிர்கள்;.
நாம் பிரசங்க மேடையயை ஆங்கிலத்தில் ‘புல்பிட்(pulpit) என்போம். இந்த புல்பிட் என்பது மிக அருமையான பதம். இதனுடைய சரியான அர்த்தம் என்ன? பிட் என்றால் குழி(pவை) புல் என்றால் இழு அல்லது தூக்கிவிடு (pulpit)அதிலிருந்து இழுத்தல். இந்த பீடம் இருக்கின்றதே இதனுடைய சரியான அhத்தம் என்ன? புல்பிட் என்று அடிக்கடி பயண்படுத்துகிறார்களே நம்முடைய பிரசங்கிகள். இங்கு பிரசங்க மேடையில் (p) இருக்கின்ற நான் மனிதனுடைய இதயங்களை புண்படுத்துவதற்காக அல்ல மேலே இருந்த படி கீழே இருக்கும் மக்களை தூக்கி எடுப்பதற்க்காகவே. ஆகவேதான் புல்பிட் என்ற பதம் பயண்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணர்வு நமக்கு எப்போதுமே வேண்டும். அவர் அன்பை வெளிப்படுத்துகின்ற அந்த பாங்கு,
‘ தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும்இ தன் சகோதரனைப் பகைத்தால்இ அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன்இ தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? ஐ யோவான் 4: 20


மனுசனிடத்தில் அன்பு செலுத்தாமல் நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கிறோம் என்று சொன்னால் அது பொய் என்கிறார் ஆண்டவர். நாம் மனிதனிடத்தில் அன்பு காட்டுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை போடுகிறோம். சரியான அன்பை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஆராதனைகளில் கையை உயர்த்தி ‘ஜ லவ் ஜிஸஸ்’ என்று சொல்கிறோம். மகிழ்வடைவதற்கு பதிலாக தேவன் துக்கப்படுகிறார்.
நம்மூலமாக ஒரு பெரிய இரட்சிப்பு, மீட்ப்பு இந்த சமுதாயத்தில் உண்டு பண்ண வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இப்போதே கிறிஸ்து பெருமானின் அன்பு என்கிற தனித்துவதை தனித்தன்மையை அல்லது சுபாவத்தை பெறுவதற்கு அர்ப்பணம் செய்யுங்கள்.

  ஒரு சம்பவம்………………….
அனேக ஆண்டுகளுக்க முன்பாக ஒரு தாயார் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த தாயரிடத்தில் கிறிஸ்த்துவின் அன்பை பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். கிறிஸ்த்து உங்கள் பாவங்களை மன்னிப்பார். உங்களின் அக்கிரமங்களுக்கு சிலுவையில் அடிக்கப்பட்டார். உங்களின் பாவங்களை மன்னிப்பதற்கு இயேசு இப்போது ஆயத்தமாக இருக்கிறார். உங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தால் இப்போது நீங்கள் அவரின் பிள்ளையாக மாறலாம் என்று எளிமையானதொரு சுவிசேஷத்தை அவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தேன்.

அவர்களுக்கு 55 வயது இருக்கும், அந்த தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய தொடங்கியது. நான் தாயைப்பார்த்து கேட்டேன் ‘ஏனம்மா அழுகிறீர்கள்….? காரணம் என்ன?’ அந்த தாய் சொன்னார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனது கணவர் மலேசியா சென்றார் அங்கு சீன மொழி பேசுகின்ற சீன பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்தார். என்னுடைய பண்ணை வீட்டிலே அந்த சீன பெண்ணை குடியமர்த்தி விட்டு, என்னை தோட்டத்து வீட்டிலே குடியமர்த்தினார். இரண்டு பேரும் சேர்ந்து மது குடிப்பார்கள் அந்த சீன பெண்ணும் அந்த அருமையான ஐய்யாவும். அவர்களுக்கு இந்த ஆட்டிறச்சி கோழி இறச்சி  வறுத்து கொடுப்பதற்கு என்னை அழைப்பார்கள். குடித்துவிட்டு கேவலமான வார்த்தைகளினால் நிந்திப்பார்கள், அடிப்பபார்கள், உதைப்பார்கள். ஒருநாள் மிகவும் ஆக்ரோசமாக என்னை கொலை செய்து விடுவதற்காக திட்டம் தீட்டி தோட்டத்தில் உள்ள என் வீட்டுக்கு வந்தார். அங்கே நான் வருவதற்கு தாமதமானதால் அவர் அரிவாளை அவரின் தலைப்பகுதியில் வைத்துக்கொண்டு குடித்திருந்ததால் அவர் அப்படியே மயங்கி உறங்கிகொண்டிருந்தார்.

நான் அந்த அறைக்க வந்தேன். என்னுடைய கணவரின் கைகளில் இருந்த அரிவாளை பார்த்தேன் பெரிய அரிவாள் அது. வெறி கொண்ட இவர் என்னை கொலை செய்வதறகு முன் நான் அதை செய்வதற்கு முந்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மயக்கத்தோடு உறங்கி கொண்டிருக்கின்ற என்னுடைய கணவரை அவர் அருகில் இருந்த அரிவாளாளை எடுத்து ஓங்கி நான் வெட்டினேன். வலியோடு கண் விழித்தார். மறுபடியும் இரண்டாம் முறை அரிவாளை எடுத்து அவரின் கழுத்திலே வெட்டினேன். அப்படியே அவர் சரிந்து விழுந்தார். என் கைகளில் இருந்த அந்த இரத்தம் வடியும் அரிவாளை எடுத்துக்கொண்டு நேராக பொலிஸ் நிலையத்தில் நான் சரணடைந்தேன். இதற்கு வேண்டிய தண்டனை சிறைச்சாலையில் முடிய, நான் விடுதலை அடைந்தேன்.  ஆனால்  நான் சிறையில் இருந்து விடுதலைப் பெற்றாலும் என் மனசாட்சி என்னை விடுதலை செய்யவில்லை. என் கண்ணை மூடி என் கணவர் கடைசியாக சாகும் போது அவர் கடைசியாக கண்விழித்து பார்த்த அந்த கோரக்காட்சி வந்துகொண்டே இருக்கின்றது.

சொந்த கணவரையே கொன்ற இந்த பாவியாக இருக்கின்ற என்னுடைய பாவத்தை இயேசு மன்னிப்பாரா….? என்னுடைய சமுதாயத்திலே, என்னுடைய ஊரிலே, ஜாதி ஜன மக்களெல்லாம் என்னை கொலைக்காரி என்று தூற்றுகிறார்கள், இந்த இயேசு என்னை அப்படி உதறித்தள்ளி விடுவாரா? என் தப்பிதத்தை மன்னிப்பாரா…? என் பாவம் மன்னிக்கப்படுமா? இந்த கொடிய பாவத்திற்கான பரிகாரம் உண்டா? எனறு புலமபினார்கள். நான் அவர்களுக்கு மிகவும் மிகவும் அமைதியாக சொன்னேன்.

‘அம்மா இந்த நிமிஷத்திலே இயேசுவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்தால் அம்மா உங்களுடைய எல்லா பாவங்களையும் இயேசு கழுவுவார்…’ உன்னைப்போல் இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வித்தில் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இயேசு அதை பழிகளாக பார்க்கவில்லை, ஐயோ என்னுடைய பிள்ளைகள் மாண்டு போகிறார்கள். மேய்யப்பன் இல்லாத ஆடுகளைப்போல் சுகவினப்படுகிறார்கள். மனுசங்கடத்தோடு இருக்கிறார். ஆதலால் இயேசு நிச்சயமாக உங்கள் பாவத்தை மன்னிப்பார் என்று சொன்னேன்.

நீண்ட நேரம் அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன்.அந்த அம்மா அமைதலோடு கண்ணீர் வடிக்கத் தொடங்கினார் இயேசுவின் மாறாத அன்பு  அவர்களின் உள்ளத்தை நிரப்பிட்டு. முடிவில் ஆண்டவர் நாமத்தினாலே அவருக்கு ஞானஸ்தானம் நானே கொடுக்க கர்த்தர் உதவி செய்தார். இன்றைக்கு அந்த தாயார் குழிப்பறி என்ற சபையிலே அங்கத்தனராக இருக்கிறார்கள்.

இந்த தாய் மீட்கப்பட்டதன் காரணம் என்ன? கிறிஸ்த்து அன்பு உள்ளவர் என்ற சத்தியம் அந்த மகளின் உள்ளத்தில் சென்றததினாலலே இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

2. மன்னிக்கிறவர்
இரண்டாவதாக இயேசு மன்னிக்கிறவர். அவரின் மிகப்பெரிய தனித்தன்மை மன்னிப்பு.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.      எபேசியர் 4: 32
தேவன் உங்களை மன்னித்ததை போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள், மன்னிப்பதில் வல்லவரே என்ற ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது. மன்னிப்பதில் வல்லவர் சிலுவையிலே தொங்கி கொண்டிருக்கிறார். உலகத்திலேயே மிக கொடூரமான தண்டனை எது தெரியுமா? சிலுவை தண்டணைதான்.

சிலுவை தண்டணை என்கிற இந்த தண்டணையை, கொலைக் கருவியை கண்டு பிடித்தவர்கள் பாரசீகர்கள்தான். அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்த பிறகு அதை ரோமர்கள் பின்பற்றினார்கள். ஏன் அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா? அவர்கள் பூமியை தெய்வமாக வழிபடுபவர்கள். அதனை குற்றமாக கண்டுப்பிடிக்கின்ற மனிதனுடைய உயிர் தம்முடைய தெய்வத்திடம் போக கூடாது என்பதற்காக அந்தரத்திலே அவன் சாக வேண்டும் என்ற காரணத்திற்காகவே கொலைக்கருவியான சிலுவையை கண்டு பிடித்தார்கள். மிகவும் கொடுரமான தண்டணை.

என்றைக்கு இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டாரோ அதற்கு பிறகு முற்றிலுமாக அந்த தண்டணை நிறுத்தப்பட்டது. ஸ்பார்ட்டகஸ் என்கிற அருமையான ஓர் பெயர். ஒருவேலை நீங்கள் புத்தகம் படிப்பவர்களாக இருந்தால் ஸ்பார்ட்டகஸ் என்ற புத்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள்.

நம்முடைய உகலச்சரித்திரத்திலே மிகப் பெரிய சாம்ராஜ்யம். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் முழு உலகத்தையும் தம் கட்டுப்பாட்க்குள்ளே வைத்திருந்த சாமராஜ்யம் ரோமர் சாமராஜ்யம். 1200 ஆண்டுகள் இந்த பூமியை ஆண்டார்கள். நிறைய சாம்ராஜ்யங்கள் வந்தன வீழ்ந்தன, இருந்தன. எபரேயர் சாம்ராஜ்யம், எகிப்தியர் சாம்ராஜ்யம், மேதியா, பெர்சியர் சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம் என்று வரலாற்றை புரட்டியவர்களுக்கு தெரியும். இந்த ரோம சாம்ராஜ்யத்திலே ஸ்பார்ட்டகஸ் என்று சொல்கின்ற ஒரு அடிமை. ‘போரர்’ என்று சொல்லுவார்கள் அவர்களை. அதாவது மூன்று தலைமுறைகளாக அடிமை வேலை செய்கிறவர்களுக்கு போரா என்று பெயர். அவர்களுக்க சிந்தனா சக்தி குறைவு. மிருகத்தை போல நடத்தப்பட்டார்கள். ஒரு வேலை படிக்க விருப்பமுள்ளவர்கள் அந்த பெயரை குறித்துக்கொண்டு புத்தகங்களை தேடுங்கள். மிக அருமையான பத்தகம். ஆங்கிலத்தில் ஸ்பார்ட்டகஸ் பற்றி அருமையான திரைப்படம் வந்திருக்கின்றது. மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட சிந்திக்கவே முடியாத அந்த ஸ்பாட்டகஸூடைய உள்ளத்திலே ஒரு புரட்சி தீ வருகின்றது.

அவனை பின் தொடாந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் புரட்சி செய்ய ஆரம்பித்தார்கள். மிகப் பழமை வாய்ந்த ரோம சாம்ராஜ்யம் சரிவதற்கு அதுதான் காரணம் ஒரே நாளில் எறத்தாழ ஏழாயிரம் பேர் வரையிலான அடிமைகளை ஒன்றாக பிடித்து சிலுவையில் அந்தரத்திலே கொன்றாhகள் அந்த ரோமாகள். சிலுவைத் தண்டணை எவ்வாறு கொடுமையானது என்பதை விளங்கி கொள்வதற்கு அந்த புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும். முழு தேகமும் ஆணியிலே அடிக்கப்பட்டு தொங்கவிடப்படுகின்ற போது இருக்கின்ற வேதனை இருக்கின்றதே பாருங்கள். அது மிகப் பெரிய தண்டனை.

ஜோசப் வாஸ் என்கிற எபிரேய வரலாற்று ஆசிரியர் இதனை விபரிக்கிறாh. அந்த கொடிய வேதனையில் எந்நவொரு மனசனும் சபிப்பான். தம்மை கைது செய்தவனை சபிப்பான், தன்னை பிடித்தவர்களை சபிப்பான், ஆணி அடித்தவனை சபிப்பான், சிலுவை செய்தவனை சபிப்பான் ஆனால் இயேசுவோ அதை செய்யவில்லை என்ன செய்தார்?

‘பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறாhகள் தயவு செய்து மன்னியும் பிதாவே…!’ எப்படி முடிந்தது? அதுதான் இயேசு கிறிஸ்து. அதுதான் அவருடைய தனித்தன்மை மன்னித்தார்.
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். மத்தேயு 27:44
அவரோடு சிலுவையில் அறையப்பட்டு கதறும் அவர்களும் அப்படியே நிந்தித்தார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் மற்றவருடன் சேர்ந்து இயேசுவை நிந்தித்தார்கள். அதற்கு பிறகுதான்
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். லூக்கா 23:44
இயேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார். அந்த ஜெபத்திற்கு பிறகு நிந்தித்த இரண்டு கள்ளர்களில் ஒருவனுக்குள் ஒரு பெரிய மாற்றம். இயேவுக்கு இடது புறம் இருந்த திருடன் சொல்கினறான் ‘நீ தெய்வமானால் உன்னையும் எங்களையும் ரடச்சித்துக்கொள்’ என்று சொல்கிறான். வலது புறத்தில் இருக்கின்ற திருடன் சொல்கின்றான் ‘நாம் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கின்றோம் தகாதவைகளுக்கு தண்டனை அனுபவிக்கவில்லை…’என்று கூறி மனம் திரும்பகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவரை நிந்தித்தவன் எல்லோரிடமும் சேர்ந்து இன்னும் நிந்தித்துக்கொண்டிருந்தான். ஆனால் மன்னிக்கும்படி இயேசு செய்த ஒரு சின்ன ஜெபம் ஒரு திருடனை மாற்றியது.
மோசேயினுடைய பிரமாணத்தை கடந்து புதிய பிரமாணத்தையும் கடந்து இயேசுவினுடைய மன்னிப்பினாலே அவர் கனப்பொழுதில் பரிசுத்தம் செய்து விட்டார். மன்னிக்கிற இந்த தன்மை இருக்கின்றது பாருங்கள் அது மனிதர்களை தன் பட்சத்தில் இழுத்துக்கொண்டு வரும். மொழிகளை கடந்து, கல்வி அடிப்படைகளை, ஜாதி அடிப்படைகளை மற்றும் எல்லா அடிப்படைகளையும் கடந்து மன்னிக்கின்ற இதயம் இருந்தால் மக்களை கர்த்தர் இழுத்துக்கொண்டு வர முடியும். எனக்கொரு மன்னிக்கிற இதயம் வேண்டும். இது இல்லாதவன் சுவிசேஷ வேலையை செய்து பயண்னில்லை. மன்னிக்கிற ஒரு தன்மை இல்லாமல் தேவனுடைய வார்த்தையை பேச இயலாது.

நடந்த நிகழ்வு
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தவறு செய்து கையும் கழவுமாக பிடிப்பட்டார். நாளை காலை முகாமையாளர் அறைக்கு செல்ல வேண்டும். ஆங்கே அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று சொன்னால் அவருடைய வேலை அங்கே பறிக்கப்படும் எல்லோருக்கும் அது தெரியும் அவன் வேலை பறிக்கப்படும் என்பது. அடுத்த நாள் காலை முகாமையாளர் முன்பு கைகளை கட்டி நின்ற அந்த மனிதன் அவனிடம் ‘இந்த தவறை செய்தாயா…? ‘ என்று கேட்டார் முகாமையாளர். ஆதற்கு அந்த மனிதர் ‘ஆம் நான் செய்தேன்…’ என்றார். ‘இதற்கு என்ன தண்டனை என்று தெரியுமா..?’  என்று கேட்டார் முகாமையாளர். ‘எனக்கு இந்த கம்பெனியில் வேலை இருக்காது என்று எனக்கு தெரியும்….’
‘இந்த தவறு மன்னிக்க கூடியதா…?’ என்ற கேட்டார் முகாமையாளர் ‘மன்னிக்கப்படாத குற்றம் நான் செய்தது…’ என்றார் அந்த மனிதர். முகாமையாளர் அவரைப்பார்த்து சொன்னார் ‘நான் உன்னை மன்னிக்கிறேன்…! இந்த நிறுவனத்தில் இவ்விதமாக மன்னிப்பட்ட இரண்டாவது நபர் நீதான்…முதலாவது நபர் யார் தெரியுமா…? நான்தான்… நான் மன்னிப்பட்டேன் ஆகவே மன்னிப்பின் விலை எனக்கு தெரியும்…மன்னிப்பின் மதிப்பு எனக்கு தெரியும்… நான் உன்னை மன்னிக்றேன்…’ அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
‘சார் இனி உலகத்தில் இருக்கின்ற வரைக்கும் உண்மையாகவே இருப்பேன்…’
இயேசு அதைதான் சொல்கிறார். மன்னிப்பை வெளிப்படுத்துவது மாத்திரம் அல்ல அவருடைய அடியார்களாகிய நாமும் கூட மன்னிக்கின்ற சிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.

நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். மத்தேயு 18:33,34,35
மத்தேயு 18 ஆம் அதிகாரத்தில் இறுதி பகுதியை தியானத்துடன் வாசித்து பாருங்கள். அதன் இறுதி பகுதியை பாருங்கள் நீங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் தேவன் உங்களுக்கு மன்னிக்க மாட்டார். என்று எழுதியுள்ளது.

கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

 

3. சாந்தம் அல்லது மன தாழ்மை உள்ள ஆவி


சாந்தமும் மனத்தாழ்மையும் இயேசுக்குள் இருக்கின்ற மிகப் பெரிய சுபாவம் என்று சொல்லலாம்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஇ என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். மத்தேயு 11 :29


நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கின்றேன் இந்த வார்த்தைகள் உற்சாகப்படுத்துகின்றது. என்னிடத்தில் வந்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஒரு காரணத்தை சொல்ல விரும்புகிறேன். புழைய ஏற்பாட்டில் ஒரு பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்று ஞானி சொல்கிறார். நீதி மொழிகள் 31ஆம் அதிகாரம் அதை சொல்கின்றது. அதிலே முதல் ஒரு கேள்வி கேட்டுவிட்டு ஒரு இல்லத்தரசியின் அதாவது நல்ல பெண்மணியின் விளக்கத்தை அதில் கொடுக்கிறார்.

குறையே இல்லாத மனைவி யார்….?
‘குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.’
என்ன கேள்வி அது ? குணசாலியான ஸ்திரியை கண்டுப்பிப்பவன் யார்? குறையே இல்லாத மனைவியை கண்டுப்பிடித்தவன் யார்? சதோதராகளே யாரிடமாவது தைரியம் இருக்கின்றதா ஒரு குறையும் என் மனைவியிடம் இல்லை என்ற சொல்வதற்கு. அப்படி யாராவது கூற முடியுமா? என் மனைவியை குறையே சொல்ல முடியாது ஏனென்றால் யாரும் அப்படி கண்டுப்பிடிக்கவில்லை. அப்படி கண்டுப்பிடித்து விட்டால் அந்த பெண்மணியின் விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்வு. அங்கே அந்த பெண்ணுடைய சுபாவம் இருக்கினறதே அதை பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் சில விளக்கங்களை சொல்கிறார்.

திருமறைதான் எத்தனை அழகானது. புதிய ஏற்பாட.டிலே அதற்கு விளக்கம் சொல்லப்படுகின்றது. புதிய ஏற்பாட்டிலே பரிசுத்த ஆவியானவர் அதற்கு பதிலை வைக்கிறார். பேதுரு மூலமாக இதற்கான பதில் கிடைக்கின்றது.

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்,அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3,4
இந்த விலையேறப்பெற்ற பெண், பெண்ணுக்கரிய சுபாவம் இங்கே சொல்லப்பட்டுள்ளது. சாந்தமும் மன அமைதியுள்ள ஆவி ஒரு பெண் மணிக்குள்ளே அந்த சுபாவம் வந்துவிட்டால் நிச்சயமாகவே அவர்கள் விலையேறப்பெற்ற பெற்றவர்கள். முத்துக்களை பார்க்கிலும் விலையேறப்பெற்றவர்கள். இப்பொழுது என்ன சொல்ல வருகிறேன் என்றால் வெறுமனே இந்த வேதப்பகுதி பெண்களுக்கு மாத்திரம் அல்ல மணவாளனாக இயேசுவுக்கு இந்த சுபாவம் வந்து விட வேண்டும். கிறிஸ்து மணவாளனாக வெளிப்பட போகிறார் என்று நீ விசுவாசித்தால் மணவாட்டியான இந்த சபையிலே சாந்தமும் மன அமைதியும் உள்ள ஆவி எமக்கு தேவை. ஆவரை போல சாந்த குணமுள்ள வேறோரு மனிதனையும் நாம் பார்க்கவில்லை.
சாந்தம் என்றால் என்ன என்பதை நமக்கு வெளிப்படுத்தி அதை பின்பற்று என்ற நமக்கு சொல்கிறார். பாருங்கள் எபிரேயர் புத்தகம் 12 ஆம் அதிகாரம் முதல் வசனம்,
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
இயேசுவை நோக்கி ஓடுங்கள். கிறிஸ்த்துவை நோக்கி ஓடுங்கள், அவர்தான் நமக்கு முனமாதிரி. இன்னும் கூடுதலாக பவுல் சொல்லகிறார் ஊழியக்காரர்கள் சிலர் சொல்லுவாங்க. நாங்கள் எல்லாம் மனிதர்கள் தயவு செய்து எங்களை பின்பற்றாதீர்கள். இயேவை பாருங்கள் என்று ஆனால் பவுல் அப்படி சொல்லவில்லை.
நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுவது போல் நீங்கள் எங்களை பின்பற்றுங்கள் அதாவது வாழந்து அவர் வாழந்து காட்டினார். நம்முடைய முன்மாதிரி இயேசுதான். சாந்தம் என்றால் என்ன என்பதை அவர் வெளிப்படுத்தினார். தன்னைத்தானே தாழத்தினார் என்கிறது பிலிப்பியர் 2:8 ஆம் சத்திய வசனம்.
‘அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.’
தன்னைத் தாழத்தும் சுபாவம் அதாவது The Humble Spirit    அல்லது  poor spirit  எளிமையுள்ள ஆவியின் தன்மை இருக்க வேண்டும் நமக்கும். இயேவுக்குள் அந்த சுபாவம் இருந்தது.
இயேசுவுக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் தயவு செய்து சுபாவங்களை முதலாவது தரித்துக்கொள்ள முயற்ச்சி செய்வோம். ஒரு சின்ன ஹைகு கவிதை இப்படியாக சொல்கின்றது.

தீ குச்சி ஏன்
எரிகிறது…?
அதன் தலை கனமாக இருப்பதனால்…!
தீக்குச்சி ஏன் எரிகிறது அதன் தலை கனமாக இருப்பதனால்தான். நிறைய பேர் அழிந்து போவதன் காரணம் தலைக்கணம். ஆக நாம் அகந்தைக்கு பதிலாக மனவேற்றுமைக்க பதிலாக நாம் அன்பு செலுத்த கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாகவே கிறிஸ்த்துவினுடைய அந்த சுபாவத்தை பெற்றிப்போம். ஆகவே நாம் தாழ்ந்த சிந்தனை உள்ளவராக இருப்போம். தாழ்ந்த சிந்தனையை தரித்துக்கொள்வோம்.
ஒரு மனிதனை குறித்து அதாவது பூமியிலே இந்த மனுஷன்தான் எல்லாருக்குள்ளும் சாந்தமாக இருந்ததாக கர்த்தர் சாட்சி கொடுத்தார். யார் என்று தெரியுமா? மோசேயை குறித்துதான் கர்த்தர் சொன்னார். மோசே எப்படிப்பட்டவன்? அடுத்தவன் பிரச்சினையில் தலையிட்டு இன்னொருவனுக்காக  கொலை செய்து கோபத்தில் மண்ணில் புதைத்தவர். ஒரு கொலைக்காரனைப் பார்த்து கர்த்தர் சாட்சி கொடுக்கிறார். பூமியில் முன்னாள் கொலைக்காரன் இவர்தான் மிக சாந்தமாக இருப்பதாக ஆண்டவர் சொல்கிறார். நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள்தான். கர்த்தர் தனக்கு இணையாக நம்மை தூக்கி விடவே முயற்ச்சி செய்கிறார். அவன் கொலைக்காரனாக இருந்தவன் ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய மனதை கர்த்தர் மாற்றிக் கொண்டே வருகிறார். ஒரு கொலைக்காரன், கோபக்காரன் சாந்த சொரூபியாக மாறுகின்றான்.

வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாடு மிக கிருபையுள்ள பிரமாணத்தை நமக்கு தருகின்றது. நாம் இன்னும் வேகமாக தேவன் எதிர்பார்க்கின்ற அந்த தெய்வீக சுபாவத்தை தரித்துக்கொள்வதற்கு கிருபை நமக்கு கிடைத்துள்ளது.

கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

4.கீழ்படிதல்


நான்காவதாக கீழ்படிதல். நீங்கள் பிலிப்பியர் 2:8 வசனத்தை வாசித்துப் பாருங்கள்,
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
சாகின்ற வரையும் கீழ்படிதல் இருந்தது. தன்னுடைய  பெற்றோருக்கு அவர்  கீழ்ப்படிந்து அடங்கி இருந்தார். என்று லூக்கா இரண்டாம் அதிகாரத்திலே வாசிகின்றோம்.
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
கீழபடிதல் அவர் கூடவே இருந்தது. கீழ்படிதல் என்ற தனித்தனமை வாய்ந்தவர் இயேசு கிறிஸ்து. தனக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அவர் எதையும் செய்யவில்லை. அவர் அடிக்கப்படுகின்ற ஆட்டைப் போலவே அவர் சென்றார். வாளை உருவி ஒரு போர் சேவகருடைய காதை வெட்டுகிறான் ஒருவன் அவன்தான் பேதுரு. பேதுரு மீன் பிடிக்கினறவன். மீனை வெட்டும் போது முதலில் செதிலைதான் வெட்டுவாhகள். ஆனால் பேதுருக்கு அந்த போர் சேவகன் ஒரு பெரிய மீன் போல் தெரிந்திருக்கும் போல் போடு ஒரே போடாக என்று. ஆனால் இயேசு சொன்னார்

‘பட்டயத்தை எடுத்தால் பட்;யத்தால் சாவான்… வாளை உறையிலே போடு’ என்று கூறி அதற்கு பின் சொன்ன விசயம்தான் முக்கிதுவமானது.
‘நான் பிதாவினிடத்தில் வேணடிக்கொண்டால் எத்தனை லேகியருக்கும் அதிகமான தூதுவர்கள் வருவாhகள். 12 க்கும் அதிகமான தூதர்களை பிதா அனுப்ப மாட்டாரா…? என்று தெரியாதா? நான் அதை செய்ய மாட்டேன். நூன் சிலுவை வரை கீழ்படிந்து இருக்க வேண்டும். என் மரணம் வரை கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். நான் அதை செய்ய போவதில்லை.’
இந்த பூமியில் நாம் எதிர்த்து நிற்கின்ற சத்துருவின் வல்லமையை மேற்கொள்வதற்கு எந்நளவுக்கு நாம் கழ்படிபவர்களாக இருக்கின்றோமோ அந்தளவுக்குதான் சாத்தானை ஜெயிக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் இயங்கிகொண்டிருக்கின்ற அந்தகார வல்லமைகளை மேற்கொள்ள வேண்டுமானால் என்னை ரட்சித்த ஆண்டவருக்கு நான் கீழ்படிய வேண்டும். தேவனுக்கு கீழ்படியுங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஆனால் நாம் இப்படி மாற்றிக்கொள்கிறோம் முதலில் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறோம், அப்புரமாக தேவனுக்கு கீழ்படிவதை பற்றி யோசிக்கிறோம். பைபிள் என்ன சொல்கிறது என்றால் முதலாவது தேவனுக்கு நீ கீழ்படிந்து பின்னாடி பிசாசுக்கு எதிர்த்து நில். அற்புதமான வாக்கு,
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோமர்16:20
சுமாதானத்தின் தேவன் சீக்கிரமாக சாத்தானை நசுக்கி உங்கள் காலுக்கு கீழ் போடுவார். யாருக்கு அதை செய்வார் ஆண்டவர் வந்தவர் போனவருக்கெல்லாம் அதை செய்வதில்லை. அதற்கு முந்திய வசனத்தை பாருங்கள்.
உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
ரோமர் 16:19
உங்கள் கீழ்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கின்றதே…. ரோமர் சபையை பார்த்து சொன்னார், நீங்கள் கீழ்படிதல் உள்ளவராக இருக்கின்றதனாலே  சாத்தானை அவர் உங்கள் காலுக்கு கீழாக போடுவார். அனேகருடைய வாழக்கையை சாத்தான் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? கிறிஸ்த்துவின் தனித்தன்மையான கீழ்படிதல் நம்முடைய வாழ்க்கையில் அனுபவமாக மறந்து போய் விடடோம்.

கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

 

தொடரும்…………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

…..

Advertisement

One Comment (+add yours?)

  1. mariemahendran
    Nov 11, 2011 @ 11:43:08

    தயவு செய்து இதையும் பாருங்கள்.. வல்லமையான சாட்சி…

    http://youtu.be/O9nfFPjsIXc

Follow

Get every new post delivered to your Inbox.