நீ தருவதாக சொன்ன பத்து முத்தங்கள்…
05 May 2011 1 Comment
in கவிதைகள் Tags: kiss, life, love, poem, sex, Tamil poem
முத்ததின் வாசனைகளை உன்
எச்சில் மட்டுமல்ல உன்
இரவுகளும் மழையை போல்
கனமான நினைவுப்படுத்துகின்றது…
நீ
தருவதாக கூறிய அந்த
பத்து முத்தங்களுக்கா தினம்
வரும்வரை காத்திருப்பபை பற்றிய
கவலைகள்தான் தற்சமயம் முத்தங்களை
எல்லாம் சபித்து விட தோன்றுகின்றது…
காதலின் முத்தங்கள்
தேவதைகள் கதைளில் வருகின்ற
இராஜகுமாரியின் கூந்தலை போல
இன்னும் புரியாத மனோநிலையை
சமன்படுத்திதான் செல்கின்றது…
பருவத்தின் கதைகளில்
கடக்கும் இரவுகளில் எத்தனை
முத்தங்கள்…
வஞ்சத்தின் முகத்தை மறைத்த
முத்தங்கள்…
அம்மாவுக்கு கொடுக்கவே முடியாது போன
வெட்கத்தின் முத்தங்கள்…
தெருவில் கண்ட சிவப்பு பெண்ணின்
உதட்ரோரம் வரும் கறுப்பு முத்தங்கள்…
கனவில் முத்தத்தோடு திரையை
கிழக்கும் மாயக்கரத்தின் ஸ்கலித முத்தங்கள்…
ஆசிரியருக்கு தரமுடியாது தவித்த
முத்தங்கள்…
பயணத்தின் நெளியும்
ஆயிரம் முத்தங்கள்…
பிரிவில் கண்ணீரை சுவைக்கும்
கருணை முத்தங்கள்..
எல்லா முத்தங்களும் சரிதான்
ஆனால் இன்று நீ
எனக்கு தருவதாக சொன்ன
அந்த பத்து முத்தங்கள்
மட்டும் பாக்கியாக
காத்துக்கிடக்கின்றது….
உன் ஏக்கத்தில்…..
00
05.05.2011.


Nov 08, 2011 @ 13:19:13
this is very nice poem, i like it.my brither.